இந்திய அணியில் தோனி, கோலி போன்ற எந்த கேப்டனும் செய்யாததை ரோஹித் செஞ்சுருக்காரு.. சபா கரீம் பாராட்டு

Saba Karim
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங் செய்யும் வங்கதேசம் நான்காவது நாள் முடிவில் 26-2 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலைமையில் 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா கடைசி நாளில் வங்கதேசத்தை விரைவாக அவுட் செய்து பின்னர் இலக்கை சேசிங் செய்ய போராடத் தயாராகியுள்ளது.

- Advertisement -

அதிரடிப் படையாக இந்தியா:

முன்னதாக 2, 3வது நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது நாளில் சரவெடியாக பேட்டிங் செய்த இந்தியா வேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாக 5 உலக சாதனைகளை படைத்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா டி20 போல தனது முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு அதிரடியை தொடங்கினார்.

அவரைப் பார்த்து ஜெய்ஸ்வால் உள்ளிட்ட மற்ற அனைத்து இந்திய வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் முதல் ஓவரிலிருந்தே எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை இந்திய அணியில் ரோகித் சர்மா கொண்டு வந்துள்ளதாக சபா கரீம் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதிரடி ரோஹித் சர்மா:

வரலாற்றில் தோனி, கோலி போன்ற வேறு இந்திய கேப்டன்kகள் இதை செய்ததில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது ரோஹித் சர்மாவின் கேரக்டரை காட்டுகிறது. கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம். இது தான் ரோஹித் சர்மாவின் தலைமையில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியான விஷயமாகும்”

இதையும் படிங்க: கம்பீர் முடிவெடுத்தாரு.. வங்கதேசம் எதிர்பாராததை செய்ய அவர் தேவைப்பட்டாரு.. இந்தியாவின் சரவெடி பற்றி மோர்கெல்

“கடந்த காலத்தில் இருந்த கேப்டன்கள் செட்டிலாகி பின்னர் வெற்றியை நோக்கி செல்வோம் என்ற அணுகுமுறையை கொண்டிருந்தனர். குறிப்பாக முதல் 5 – 6 ஓவர்கள் நேரம் எடுத்து பின்னர் அதிரடி காட்டுவோம் என்ற அணுகுமுறையை பின்பற்றினர். ஆனால் ரோஹித் சர்மா அதற்கெல்லாம் இங்கே வேலையில்லை முதல் பந்திலிருந்தே நாம் வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகு முறையை பின்பற்றுகிறார்” என்று கூறினார்.

Advertisement