- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரட்டைசதம் அடிச்சாச்சுன்னு மெதப்பில் இருக்காதீங்க. கில் மற்றும் இஷான் கிஷனை எச்சரித்த – சுனில் கவாஸ்கர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது நிகழ்த்த முடியாத சாதனையாக பார்க்கப்பட்ட வேளையில் அதனை முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் செய்து காண்பித்தார். அதன் பிறகு விரேந்திர சேவாக், ரோகித் சர்மா என மூன்று இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்து அசத்தினர். அதன்பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இஷான் கிசான் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். அதோடு இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரராகவும் அவர் சாதனை பட்டியலில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்து இருந்தார்.

- Advertisement -

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஐந்து வீரர்கள் இரட்டை சதம் அடித்து முன்னிலையில் உள்ள வேளையில் இரட்டை சதம் அடித்த பிறகு இஷான் கிஷனுக்கு மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இப்படி இரட்டை சதம் விளாசிய ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காதது அதிருப்தி அளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை சதம் அடித்து விட்டோம் என்று மிதப்பில் இருக்க வேண்டாம் என அவர்கள் இருவரையும் எச்சரித்தும் உள்ளார்.

இதுகுறித்து கட்டுரை ஒன்றினை எழுதியுள்ள கவாஸ்கர் அதில் குறிப்பிட்டதாவது : கடந்த ஒரு மாதத்தில் இரண்டு இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளனர். இரண்டுமே இளம் வீரர்களின் அற்புதமான இன்னிங்ஸாக இருந்தது. அவர்களுக்கு முன் ஒரு பெரிய எதிர்காலமே இருக்கிறது. தற்போது தான் அவர்கள் 20-களின் தொடக்கத்தில் உள்ளனர். எனவே எதிர்காலத்தை பற்றி அவர்கள் முழுக்க முழுக்க யோசிக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

நான் சொல்வதெல்லாம் ஒரே ஒரு விடயம் மட்டும்தான். இரட்டை சதம் அடித்த பிறகு நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற மிதப்பில் அவர்கள் இருவரும் இருக்கக்கூடாது. தற்போது உள்ள இளைஞர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அது நல்ல விடயம் தான் ஆனால் அதிக நம்பிக்கையில் இருக்கக் கூடாது.

இதையும் படிங்க : வருங்காலங்களில் எம்எஸ் தோனி ஸ்டேண்ட் பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ள 3 மைதானங்கள்

தேசிய அணியில் இடம்பெற்று விளையாடும் வீரர்கள் தொடர்ச்சியாக தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே எந்த ஒரு நிலையிலும் நாம் நமது எண்ணத்தை பூர்த்தி செய்து விட்டோம் என்ற மிதப்பில் மட்டும் இருக்கக்கூடாது என கவாஸ்கர் அவர்களை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by