200 ரன்கள் அடிச்சாலும் அவர் இல்லனா இந்திய அணி ரொம்ப கஷ்டப்படறாங்க – சுனில் கவாஸ்கர் கவலை

Gavaskar
Advertisement

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தினை அளித்தது என்று கூறலாம். ஏனெனில் முதலில் விளையாடிய இந்திய அணி 208 ரன்களை குவித்து அதிரடி காட்டியது.

INDvsAUS

அதன் பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினையும் சேசிங் செய்து ஆஸ்திரேலியா அணி அசத்தியது. அந்த போட்டி முழுவதுமே சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்ததால் போட்டி விறுவிறுப்பாக சென்றது.

- Advertisement -

ஆனாலும் 208 ரன்கள் குவித்தும் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியடைந்தது பெரிய விமர்சனங்களை சமூக வலைதளத்தில் எழுப்பியது. இந்நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்தும், இந்திய அணியின் முக்கியமான பலவீனம் குறித்தும் தற்போது முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Bumrah 1

இந்திய அணிக்கு வந்துள்ள இந்த பிரச்சனை புதிது கிடையாது. கடந்த சில வருடங்களாகவே இந்த பிரச்சனை நமது அணியில் நீடித்து வருகிறது. அதாவது பும்ரா இல்லை என்றால் ஆட்டம் கடினம் என நினைக்கிறார்கள். பும்ரா இருந்தால் எவ்வளவு குறைவான ஸ்கோராக இருந்தாலும் இந்திய அணி அதனை கட்டுப்படுத்துகிறது.

- Advertisement -

ஆனால் அவர் இல்லை என்றால் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களை அடித்தாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. பும்ரா கண்டிப்பாக அணிக்கு தேவை என்ற நிலைதான் இருந்து வருகிறது. ஆனால் அப்படி பும்ரா இல்லை என்றாலும் நம்பிக்கையை விட்டு விடக்கூடாது. எப்படிப்பட்ட ஸ்கோரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : IND vs AUS : 8 ஓவர் போட்டி என்பதனால் ரோஹித் சர்மா எடுத்த புத்திசாலித்தனமான முடிவு – விவரம் இதோ

இந்திய அணியின் மற்ற பவுலர்களும் தங்களது பங்களிப்பினை சரியாக வழங்கி அணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டியது அவசியம். இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமெனில் நிச்சயம் 16 முதல் 20 வரை உள்ள ஓவர்களை நன்றாக வீசியாக வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement