IND vs AUS : 8 ஓவர் போட்டி என்பதனால் ரோஹித் சர்மா எடுத்த புத்திசாலித்தனமான முடிவு – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே மொஹாலி மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்பாக நாக்பூரில் பெய்த மழை காரணமாக அவுட் ஃபீல்டு ஈரப்பதமாக இருந்ததன் காரணமாக போட்டி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக இன்றைய இரண்டாவது டி20 போட்டி எட்டு ஓவர்கள் வரை மட்டுமே நடைபெறும் என்று அம்பயர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி டாசில் வெற்றிபெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது தங்களது இன்னிங்சை விளையாடி முடித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது எட்டு ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற பிறகு கேப்டன் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு தற்போது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

Dinesh Karthik 1

அந்த வகையில் போட்டி எட்டு ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்பதனாலும் பவுலர்கள் இரண்டு ஓவர்கள் வரை மட்டுமே அதிகப்படியாக வீச முடியும் என்பதன் காரணமாகவும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களையுமே தேர்வு செய்து நான்கு பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்திய அணி களமிறங்கும் என்று ரோகித் சர்மா முடிவு செய்தார்.

- Advertisement -

ஐந்தாவது பவுலராக ஹார்டிக் பாண்டியா இருப்பதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்படி ரோகித் எடுத்த முடிவு சரியான ஒன்று என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் எட்டு ஓவர் போட்டியின் போது 91 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தும் போது எப்படியும் பேட்ஸ்மேன்கள் அடித்து தான் ஆட வேண்டும். அதன் காரணமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் இருப்பது சேசிங்கிற்கு நல்லது.

இதையும் படிங்க : விராட் கோலி சேஸ் மஸ்டராக இருக்கலாம் ஆனால் இவர் அவரையும் மிஞ்சியவர் – முன்னாள் பாக் வீரர் அதிரடி கருத்து

அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த இந்த முடிவு சரியான ஒன்று. மேலும் சமீப காலமாகவே தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒரே போட்டியில் விளையாடுவார்களா? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வந்த வேளையில் இன்றைய போட்டியில் அவர்கள் இருவருமே விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement