தமிழக வீரர் நடராஜனால் நிச்சயம் அது முடியும். மீண்டும் இந்தியன் டீம்ல அவரை சேருங்க – கவாஸ்கர் ஆதரவு

gavaskar
- Advertisement -

தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக பயணித்தார். பின்னர் அங்கு வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பிடித்த நடராஜன் பந்துவீச்சில் அசத்தியதோடு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட தொடர்ச்சியான காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களில் தனது வாய்ப்பை இழந்த நடராஜன் 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெறும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றார்.

Nattu

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை, கொரோனா என அடுத்தடுத்து உடல் ரீதியான பிரச்சனைகளால் கடந்த ஆண்டு முழுவதுமாக ஐபிஎல் தொடரை தவறவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியில் மீண்டும் இடம் பிடித்த அவர் தற்போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நடராஜன் காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் தற்போது சிறப்பாக பந்துவீசி வருவது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

Natarajan Nattu SRH

அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தற்போது தமிழக வீரர் நடராஜனை பாராட்டி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடராஜனால் எந்த நேரத்திலும் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீச முடியும் என்பதை நாம் அறிவோம். அவர் யார்க்கர் பந்துகளை வீசுவதில் சிறந்தவர். அவரை தற்போது நாம் அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டியது நல்லது.

- Advertisement -

ஏனெனில் சில நேரம் இந்திய அணி அவரை இழந்தது போல் தோன்றுகிறது. நிச்சயம் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும். அப்படி அவருக்கு இடம் கிடைக்கும் வேளையில் அவரால் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீச முடியும். குறிப்பாக இறுதிக்கட்டத்தில் 16 முதல் 20 ஓவர்கள் வரை அவர் வீசும்போது பேட்ஸ்மேன்களை திணறடித்து அவர்களது விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதையும் படிங்க : இன்னொரு முறை இந்த தப்பை பண்ணீங்க. அடுத்த போட்டியில் ஆடமுடியாது – கே.எல் ராகுலுக்கு எச்சரிக்கை

எனவே நிச்சயம் அவருக்கு விரைவில் இந்திய டி20 அணியில் இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறயிருக்கும் உலக கோப்பையில் விளையாட தயாராக இருக்கிறார் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement