அது தெரியலன்னா உங்கள பேட்ஸ்மேன்னு வெளியே சொல்லாதீங்க.. வெளிநாட்டு அணிகள், ஊடகங்களை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 2
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை பரிசளித்த தென்னாபிரிக்காவை 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

அத்துடன் 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் சமன் செய்து இந்தியா சாதனையும் படைத்தது. இருப்பினும் கேப் டவுன் நகரில் நடைபெற்ற அந்த தொடரின் 2வது போட்டி இரண்டரை நாட்களில் முடிந்து பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல் நாளிலேயே தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

பேட்ஸ்மேன்னு சொல்லாதீங்க:
அதை விட இந்தியா 153/4 என்ற நிலைமையில் இருந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு பிட்ச் முழுவதுமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இந்நிலையில் இதே மைதானம் தங்கள் நாட்டில் இருந்திருந்தால் இந்தியா வேண்டுமென்றே வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்திருப்பதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் வசைப்பாடியிருக்கும் என சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் தரமான சுழலை எதிர்கொள்ள தெரியாமல் இந்தியாவில் மைதானங்களை குறை சொல்பவர்கள் தங்களை பேட்ஸ்மேன் என்று சொல்லக்கூடாது என விமர்சிக்கும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இது தான் டெஸ்ட் கிரிக்கெட்டாகும். அதில் உங்களுடைய திறமைகள் சோதிக்கப்படும். இருப்பினும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் உங்களால் விளையாடாமல் போனால் உடனே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஊடகங்கள் விமர்சிப்பார்கள்”

- Advertisement -

“அதே போல வேகம், பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமான மைதானத்தில் உங்களுக்கு விளையாட தெரியவில்லையெனில் நீங்கள் பேட்ஸ்மேன் என்று சொல்லாதீர்கள் என அவர்கள் பேசுவார்கள். இங்கே நான் மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் உங்களுக்கு சுழல் பந்துகளை எதிர்கொள்ள தெரியாவிட்டால் நீங்கள் பேட்ஸ்மேன் கிடையாது என்று நான் சொல்வேன். இந்த பிட்ச்சில் 2 வகையான நகர்வுகள் இருந்தது”

இதையும் படிங்க: இங்கயும் வந்துட்டீங்களா மகாபிரபு.. 2வது டெஸ்டில் வென்றும் இந்தியாவின் கௌரவத்தை பறித்த ஆஸ்திரேலியா

“இதே போல இந்தியாவில் 4 ஸ்பின்னர்கள் இருந்தாலும் நீங்கள் வெள்ளை கோட்டை பயன்படுத்தி விளையாடினால் தூக்கி அடிக்க முடியும்” என்று கூறினார். முன்னதாக இந்தியாவில் இருக்கும் மைதானங்களை பற்றி யாரும் பேசாத வரை தமக்கு கேப் டவுன் போன்ற மைதானங்களில் விளையாடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ரோகித் சர்மாவும் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement