இதெல்லாம் ரொம்ப ஓவர் – ஆஸிக்கு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயமா? இந்தூர் பிட்ச்சை தண்டித்த ஐசிசிக்கு கவாஸ்கர் கண்டனம்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி நிறைய தருணங்களில் சுமாராக செயல்பட்ட இந்தியாவை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் துவம்சம் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள அந்த அணி ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. முன்னதாக நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளை விட 3வது போட்டி நடைபெற்ற இந்தூர் பிட்ச்சில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி அளவுக்கு பந்து தாறுமாறாக சுழன்றது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக புஜாரா, விராட் கோலி ஆகியோர் மோசமான பேட்டிங்கால் அவுட்டானார்கள் என்று சொல்வதை விட எதிர்பாராத வகையில் சுழன்று வந்த பந்தால் அவுட்டானார்கள் என்று சொல்லலாம்.

கவாஸ்கர் பதிலடி:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக போட்டியின் முடிவில் ரேட்டிங் வழங்கிய ஐசிசி அதற்கு தண்டனையாக 3 கருப்பு புள்ளிகளை வழங்கி அதிரடி காட்டியுள்ளது. இதனால் அடுத்த 5 வருடங்களுக்குள் இந்த கருப்பு புள்ளிகள் 5 புள்ளிகளை தொடும் போது இந்தூர் மைதானத்தில் 12 மாதங்கள் சர்வதேச போட்டியில் நடத்துவதற்கான தடை அமலுக்கு வரும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தூர் பிட்ச் எதிர்பாராத அளவு சுழன்றாலும் “மோசம்” என ரேட்டிங் வழங்கும் அளவுக்கு ஆபத்தான வகையில் சுழலவில்லை என்று சுனில் கவாஸ்கர் ஐசிசிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Brisbane Gabba Cricket Ground Stadium

குறிப்பாக கடந்த டிசம்பரில் காபாவில் 5 மி.மீ பச்சை புற்கள் கொண்ட பிட்ச்சை உருவாக்கி தென்னாபிரிக்காவை இரண்டரை நாட்களில் ஆஸ்திரேலியா தோற்கடித்த போது சராசரி என்ற ரேட்டிங்கை கொடுத்து 1 கருப்பு புள்ளியை மட்டுமே வழங்கிய ஐசிசி அந்தளவுக்கு ஆபத்தில்லாமல் ஓரளவுக்கு மட்டுமே சுழன்ற இந்தூர் பிட்ச்சுக்கு 3 கருப்பு புள்ளிகளை வழங்கியது நியாயமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த டிசம்பரில் பிரிஸ்பேன் நகரில் காபா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்த போது எத்தனை கருப்பு புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் அதை கொடுத்த நடுவர் யார் என்பதை பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் 3 கருப்பு புள்ளிகள் என்பது மிகவும் அதிகப்படியானதாகும். ஆம் இந்தூரில் பிட்ச் சுழன்றது காபா போல ஆபத்தானதாக இல்லை. மேலும் ஆஸ்திரேலியா 77/1 என்ற நிலைமையில் இருந்த போது பிட்ச் மிகச் சிறப்பாக இருந்தது என்பதை உங்களுக்கு காட்டியது” என்று கூறினார்.

Sunil-gavaskar

அவர் கூறுவது போல இந்தூர் பிட்ச்சில் இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா ஓரளவு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக 3வது நாளில் 75 ரன்களை துரத்தும் போது ஒரு விக்கெட் மட்டுமே இழந்து ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் காபாவில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் இரு அணி பேட்ஸ்மேன்களும் பந்தை தொட முடியாமல் திண்டாடினார்கள் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: IND vs AUS : கடந்த 10 வருஷத்துல இந்தியா இப்படி தோக்குறது இதுதான் முதல்முறை – விவரம் இதோ

அதை விட 3வது நாளில் வெறும் 35 ரன்களை துரத்தும் போது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக போராடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் காபா மைதானத்திற்கு 1 கருப்பு புள்ளியும் இந்தூர் மைதானத்துக்கு 3 கருப்பு புள்ளியும் வழங்கியது எந்த வகையிலும் நியாயமில்லை என்று சுனில் கவாஸ்கர் ஐசிசி’யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement