IND vs AUS : கடந்த 10 வருஷத்துல இந்தியா இப்படி தோக்குறது இதுதான் முதல்முறை – விவரம் இதோ

Pujara
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இந்த தொடரில் முதல்முறையாக பின்னடைவை சந்தித்துள்ளது.

Nathan-Lyon-1

அதன்படி இந்தூரில் நடைபெற்று வந்த இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்சில் 197 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இந்த இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

KS Bharat

ஆஸ்திரேலிய அணியும் அதனை எளிதாக எதிர்கொண்டு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பதிவு செய்தனர். அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2012-13 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது சொந்த மண்ணில் முதலில் பேட்டிங் செய்து தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க : டாப் 2 டீம்ல விராட் – ஸ்மித் இருந்தும் அதை பாக்க முடியல, அப்படி நேர்மையின்றி எதுக்கு விளையாடனும்? பிசிசிஐக்கு சபா கரீம் கேள்வி

அதன் பின்னர் சொந்த மண்ணில் பத்து ஆண்டுகளாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்போது தோற்றதே கிடையாது. இந்த 10 ஆண்டுகால வெற்றிப் பயணத்தை இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது இந்திய மண்ணில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து தோற்பது இதுவே கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement