ஐ.பி.எல் தொடருக்கு முன்பாகவே விராட் கோலி நிச்சயம் அந்த சம்பவத்தை செய்வாரு – சுனில் கவாஸ்கர் பேட்டி

Gavaskar-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது. இப்படி ஒரு பெரிய ரன் குவிப்பை வழங்க முக்கிய காரணம் துவக்க வீரர் சுப்மன் கில் அடித்த 116 ரன்களும், பின்னர் விராட் கோலி அடித்த 166 ரன்களும் தான்.

virat kohli 166

- Advertisement -

அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை விளையாடிய விராட் கோலி 110 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 166 ரன்கள் குவித்து இலங்கை அணியை சிதறடித்தார் என்றே கூறலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் தவித்து வந்த விராட் கோலி தற்போது கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசி அசத்தலான ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 46வது சதத்தை பதிவு செய்த விராட் கோலிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Virat Kohli 46

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதங்கள் என்கிற சாதனையை சமன் செய்வார்.

- Advertisement -

ஏனெனில் தற்போது அவரது அவர் விளையாடி வரும் விதத்தை பார்க்கும்போது மீண்டும் அவருடைய பழைய பார்மிற்கு திரும்பி இருக்கிறார். இனிமேல் அவருக்கு சதம் அடிப்பது வெகு இலகுவாகவே இருக்கும். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : ஜனவரி 15 விராட் கோலியின் நாளாக அறிவிங்க – அடுத்தடுத்த சாதனகள் படைத்த கிங் கோலியை கொண்டாடும் ரசிகர்கள்

அதனால் நிச்சயம் அந்த தொடர்களிலேயே என்னை பொறுத்தவரை விராட் கோலி சச்சினின் 49 சதங்கள் என்கிற சாதனையை சமன் செய்வார் என்று தான் முழுமையாக நம்புவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement