- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 3 வருஷம் விளையாடுனா போதும்.. நிச்சயமா விராட் கோலியால் அதை சாதிக்க முடியும் – கவாஸ்கர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரமான விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி மூன்றாவது போட்டியிலும் அரைசதம் கடந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். அவரது இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியால் 100 சதம் அடிக்க முடியும் : சுனில் கவாஸ்கர்

அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்று விளையாட இருக்கிறார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இனி தொடர்ந்து ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலககோப்பை தொடரை குறிவைத்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் 53 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் மற்றும் டி20 போட்டியில் ஒரு சதம் என சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக 84 சதங்களை விளாசியுள்ளார்.

அதன்மூலம் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக சதங்களை சர்வதேச போட்டிகளில் விளாசிய வீரர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் விராட் கோலியால் நிச்சயம் 100 சதம் என்கிற சச்சினின் சாதனையை சமன் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சதங்களை அடித்துள்ளார். அதற்கடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் 2 சதங்கள் அடித்தால் 86 சதங்கள் என்கிற எண்ணிக்கையை தொடும்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரில் யார் விக்கெட் கீப்பர்? தெ.ஆ தொடரில் – விளையாடப்போவது யார்?

அதன்பிறகு 100 சதங்கள் என்கிற இடத்தினை எட்டுவதற்கு மிகச் சிறப்பான வாய்ப்பு அவருக்கு காத்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் நிச்சயம் அவரால் அந்த சாதனையை எட்ட முடியும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -