ஐ.பி.எல்-லில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். அவரை ஏன் டீம்ல சேக்க மாட்றீங்க – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஐ.பி.எல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றாலும் அவர்களுக்கு ஆடும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை இருந்தாலும் இந்திய அணியுடன் இளம் வீரர்கள் பயணிப்பது அவர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பதனால் இந்த தேர்வு நடைபெற்றது.

Avesh Khan 2

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வரும் 24-ஆம் தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அங்கு பயணிக்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி 26-ம் தேதியும், இரண்டாவது போட்டி 28-ம் தேதியும் டூப்ளின் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியும் பிசிசிஐ ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

இந்த தொடருக்கான அணியிலும் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி முதல் முறையாக ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் கலக்கிய இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ராகுல் திவாதியாவை சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Tewatia 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் திவாதியா ஒரு சிறந்த அதிரடியான பேட்ஸ்மேன். அவரை இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சேர்த்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால் அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரை அணியில் கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் அவர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

தற்போது உள்ள இந்திய அணிக்கு நிச்சயம் அவரைப் போன்ற ஒரு வீரர் பின்வரிசையில் தேவை. எனவே அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டிய ஒருவர் என்றும் சொல்லப்போனால் உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற வேண்டிய வீரர்களில் ஒருவர் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எங்களின் வெற்றிநடையை நிறுத்தியது அவர்தான் – இந்திய சீனியர் பவுலரை பாராட்டும் மார்க் பவுச்சர்

அயர்லாந்து நாட்டிற்கு வரும் 24-ஆம் தேதி புறப்படும் இந்திய அணியுடன் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மாவும் பயணிக்க உள்ளதாகவும் அங்கு நடைபெறும் அந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் இளம் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை அவர் நேரில் பார்வையிட போவதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement