தினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் அணிகளில் வெற்றிகரமாக இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. சென்னை மற்றும் மும்பை அணிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணி தான் பெயர் சொல்லும் அளவிற்கு சில சாதனைகளைப் படைத்திருக்கிறது. கௌதம் கம்பீர் தலைமையில் 2 முறை இந்த அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தினேஷ் கார்த்திக் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.

Kkr

- Advertisement -

2018 ஆம் ஆண்டு துவங்கிய உடன் முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற தினேஷ் கார்த்திக் அடுத்து இரண்டு வருடமும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லவில்லை. அந்த அளவிற்குத்தான் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப் இருக்கிறது என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இதனை தற்போது வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார்

சுனில் கவாஸ்கர் மேலும் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அவர் கூறுகையில்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் அசுர பலம் கொண்டதாக இருக்கிறது. இந்த அணியில் புதிதாக மிடில் ஆர்டரில் இயான் மார்கன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். ஒருவேளை முதல் ஐந்து போட்டிகளில் கொல்கத்தா அணியை சிறப்பாக செயல்படாவிட்டால் அந்த அணியின் கேப்டன் கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

morgan

தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இயான் மார்கனை கொல்கத்தா நிர்வாகம் கேப்டனாக நியமிக்க வேண்டும் இது அந்த அணிக்கு இந்த முறை கை கொடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

Advertisement