- Advertisement -
ஐ.பி.எல்

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு அடுத்து இவரே அடுத்த 360 பிளேயர் – கவாஸ்கர் ஓபன்டாக்

நடப்பு ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்தத் தொடரிலும் இல்லாத வகையில் இந்தத் தொடரை அதி அற்புதமாக தொடங்கியிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அந்த அணி இத்தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று, புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. இதற்கிடையில் அந்த அணியை பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் :

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இரண்டு 360 டிகிரி ப்ளேயர்ஸ் இருப்பதால்தான் அந்த அணி வெற்றிபெற முடியாத அணியாக இருக்கிறது என்று கருத்து கூறியுள்ளார். 360 டிகிரி ப்ளேயர் என்றாலே அது ஏபி டிவில்லியர்சைத்தான் குறிக்கும். ஆனால் கவாஸ்கரோ இன்னொரு 360 டிகிரி ப்ளேயரும் இருக்கிறார் என்று கூறுகிறார். யார் அந்த இன்னொரு ப்ளேயர். இது பற்றி கூறிய சுனில் கவாஸ்கர் :

- Advertisement -

பெங்களூர் அணியின் புது வரவான கிளென் மேக்ஸ்வெல்லைத்தான் இன்னொரு 360 டிகிரி ப்ளேயர் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேக்ஸ்வெல்லைப் பற்றி கூறிய சுனில் கவாஸ்கர், மேக்ஸ்வெல்லின் அதிரடியான, அதேசமயம் பொறுப்பான ஆட்டத்தை பார்ப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்தான் பெங்களூர் அணியின் இன்னொரு 360 டிகிரி பிளேயர். இதை நான் அவர் ரிவர்ஸ் ஷீப் ஷாட் நன்றாக ஆடுகிறார் என்பதைப் பார்த்தெல்லாம் கூறுவில்லை. ஒரு வலது கை வீரர் லெக் சைடில் ஒரு பந்தை எளிதாக அடித்து விட முடியும்.

ஆனால் அதே வீரரால் பந்தை ஆப் சைடில் அடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் மேக்ஸ்வெல் அதை மிகச் சிறப்பாக செய்கிறார். எனவேதான் அவரை இன்னொரு 360 டிகிரி பிளேயர் என்று நான் கூறுகிறேன். பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டம், அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் மற்றொரு வீரரான ஏபி டிவில்லியர்ஸ்க்கும் மேலிருந்த அழுத்தத்தைக் குறைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு சிறப்பாக விளையாடாத மேக்ஸ்வெல்லை இந்த ஆண்டு அந்த அணியானது விடுவித்தது. எனவே இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது. அப்பொழுதே பெங்களூர் அணியின் இந்தச் செயலை பல முன்னாள் வீரர்களும் பாராட்டியிருந்தனர். அதேபோல் மேக்ஸ்வெல்லும் இந்த தொடரில் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by