சச்சினுக்கு அப்புறம் இவர் விளையாடுறத பாக்கத்தான் நான் வெயிட் பண்றேன் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Sunil-Gavaskar
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு இந்திய அணியில் சரியான வீரர்கள் இல்லை என்றும் வீரர்கள் சரியான முறையில் தேர்வு செய்த பட்டிருந்தால் இந்திய அணி கோப்பையை வென்றிருக்க முடியும் என்று பலரும் கூறியிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் சாதாரணமான பவுலர்களை கொண்டு சென்று வெற்றி பெறுவது கடினம் என்றும் பலரும் கூறியிருந்தனர்.

Umran-Malik

- Advertisement -

அதோடு நிச்சயம் இந்த டி20 உலக கோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறியிருந்தனர். தற்போதுள்ள இந்திய பவுலர்களில் அதிவேகமாக பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக் கட்டாயம் டி20 உலக கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பலரும் கூறியிருந்தனர். ஆனாலும் அவருக்கு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தற்போது அவர் இந்திய அணிக்காக அடுத்தடுத்த தொடர்களில் விளையாடி வருகிறார்.

அந்த வகையில் 23 வயதான உம்ரான் மாலிக் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடந்த மாதம் அறிமுகம் ஆகினார். அதேபோன்று டி20 கிரிக்கெட்டிலும் இந்த ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார். முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி வருகிறார்.

Umran Malik

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நெட் பவுலராக இருந்த உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக களமிறங்கி அந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் இவரை இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது படிப்படியாக அவர் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் பார்க்க விரும்பும் ஒரு வீரர் என்றால் அது உம்ரான் மாலிக் தான் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் தற்போது தன்னுடைய கிரிக்கெட் கரியரின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். தற்போது 23 வயதான அவர் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி வருகிறார்.

இதையும் படிங்க : IND vs BAN : ரோஹித்தை தொடர்ந்து மேலும் 2 வீரர்கள் டெஸ்ட் தொடரிலிருந்து விலகல் – இதுவேறயா?

இப்படி ஒரு இந்திய வீரரிடம் இருந்து வேகத்தை பார்ப்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது. எனவே தான் நான் அவர் விளையாடுவதை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்க்கிறேன் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமின்றி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது அதிவேகத்தால் அசத்தி வரும் உம்ரான் மாலிக் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்தால் பெரிய உச்சத்தை தொடுவார் என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement