CSK vs LSG : சி.எஸ்.கே அணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர் காட்டம்

Sunil-Gavaskar
- Advertisement -

தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16-வது ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்திலிருந்தே மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி முதல் விக்கட்டுக்கே 110 ரன்களை சேர்த்து அசத்தியது.

CSK vs LSG

- Advertisement -

பின்னர் பின்வரிசை ஆட்டக்காரர்களும் அதிரடியில் கை கொடுக்க சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது இறுதிவரை இலக்கை துரத்த போராடியது.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆங்கில கமெண்ட்ரில் அமர்ந்திருந்த சுனில் கவாஸ்கர் :

ruturaj

சிஎஸ்கே அணியின் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் செய்த தவறினை சுட்டிக்காட்டி சிஎஸ்கே அணிக்கு பெனால்டி கொடுத்திருக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடைசி ஓவரின் போது ருதுராஜ் கெய்க்வாட் பந்தை பவுண்டரி லைனில் தடுக்க ஓடினார்.

- Advertisement -

அப்போது பந்தை அவர் சிறப்பாக தடுத்திருந்தாலும் பந்து அவர் வைத்திருந்த டவலின் மீது பந்து பட்டதால் 5 ரன்கள் பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொதுவாக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ஹெல்மெட் அல்லது கீப்பரின் கழட்டி வைக்கப்பட்ட கிளவுஸ் போன்றவர்களின் மீது பந்து பட்டால் பெனால்டி வழங்குவது வழக்கம்.

இதையும் படிங்க : CSK vs GT : கிருஷ்ணப்பா கெளதம் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த தோனி – ரெய்னா, உத்தப்பாவின் உருக்கமான சிஎஸ்கே ரீயூனியன் இதோ

அந்த வகையில் தற்போது வீரர் வைத்திருக்கும் டவல் மீதும் பந்து பட்டதற்கு கவாஸ்கர் பெனால்டி கேட்டுள்ளது அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement