CSK vs GT : கிருஷ்ணப்பா கெளதம் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த தோனி – ரெய்னா, உத்தப்பாவின் உருக்கமான சிஎஸ்கே ரீயூனியன் இதோ

- Advertisement -

கோலகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 217/7 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக லக்னோவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதல் ஜோடியாக சாதனை படைத்த ருதுராஜ் கைக்வாட் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (31) ரன்களும் டேவோன் கான்வே 5 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (29) ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் சிவம் துபே 27 (16) மொயின் அலி 19 அம்பத்தி ராயுடு 27* (14) கேப்டன் தோனி 12 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

சிஎஸ்கே ரீயூனியன்:
அதை தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு 8 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 5.5 ஓவரிலேயே 53 (22) ரன்களை அடித்து நொறுக்கி மிரட்டலான தொடக்கம் கொடுத்த கெய்ல் மேயர்ஸை அவுட்டாக்கிய மொய்ன் அலி கேப்டன் கேஎல் ராகுல் 20 (18), க்ருனால் பாண்டியா 9 (9), மார்கஸ் ஸ்டோனிஸ் 21 (18) என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் நிக்கோலஸ் பூரான் 32 (18) ஆயுஷ் படோனி 23 (18) என அடுத்து வந்த வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்து போராடியும் 20 ஓவரில் 205/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது.

முன்னதாக 2019க்குப்பின் 1412 நாட்கள் கழித்து தற்போது புதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் மஞ்சள் உடை அணிந்து ஆதரவு கொடுத்த ஏராளமான ரசிகர்களுக்கு சென்னை அணியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியையும் மகிழ்ச்சியையும் பரிசளித்தது. அந்த மகிழ்ச்சிக்கு மத்தியில் போட்டியின் முடிவில் லக்னோ அணிக்காக விளையாடும் ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தோனியை சந்தித்தார்.

- Advertisement -

கடந்த 2 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடியதால் அவருடைய குடும்பம் இப்போதும் லக்னோவை விட சென்னை மற்றும் தோனியின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் தன்னை சந்தித்த அவரது குடும்பத்திடம் மகிழ்ச்சியாக பேசிய தோனி கிருஷ்ணப்பா கெளதமின் செல்ல மகளின் கைகளில் தட்டி கொஞ்சி மகிழ்ந்தார்.

அதை விட சென்னை அணிக்காக 2008 – 2021 வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்களை குவித்து 4 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும் நேற்றைய போட்டியை 2021, 2022 சீசனங்களில் விளையாடிய மற்றொரு வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக பார்த்து ஆதரவு கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக போட்டி துவங்குவதற்கு முன்பாக “சேப்பாக்கம் மைதானத்திற்குள் அடி எடுத்து வைப்பது வீட்டுக்கு திரும்புவது போன்ற உணர்வை கொடுக்கிறது. இந்த மைதானம் எனது வெற்றிகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் விளையாட்டின் மீதான எனது வாழ்நாள் காதலையும் கண்டுள்ளது. என் இதயம் இருப்பிடத்திற்கு நான் திரும்பி வந்ததற்கு நன்றி” என்று ட்விட்டரில் பதிவிட்டது சென்னை ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் போட்டி முடிந்ததும் தோனியை நேராக சந்தித்து கட்டிப்பிடித்த அவர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: CSK vs LSG : தோனிக்கு யார் யாரை எப்போ யூஸ் பண்ணனும்னு நல்லா தெரியும் – ஆட்டநாயகன் மொயின் அலி பேட்டி

அதிலும் குறிப்பாக “சிஎஸ்கே ரீயூனியன். இது மிகச் சிறந்த போட்டி கேப்டன்” என்று தோனியை பாராட்டியுள்ள ரெய்னா சென்னை மீதான அன்பை வெளிப்படுத்தினார். அதே போல் சென்னைக்காக விளையாடிய முன்னாள் தமிழக வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோருடன் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட சென்னை ரியூனியன் புகைப்படத்தை ராபின் உத்தப்பாவும் ட்விட்டரில் பகிர்ந்து சென்னை மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement