IND vs RSA : டி20 கிரிக்கெட்டில் இதுதான் அவரோட வீக்னெஸ் – ரிஷப் பண்ட்டை எச்சரிக்கும் ஜாம்பவான்

RIshabh Pant Poor Batting
- Advertisement -

தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூன் 17இல் நடைபெற்ற முக்கியமான 4-வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 169/6 ரன்கள் சேர்த்தது. 81/4 என இந்தியா தடுமாறிய நிலையில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 46 (31) ரன்களும் தினேஷ் கார்த்திக் 55 (27) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்து காப்பாற்றினர்.

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 16.5 ஓவரில் 87/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு குயின்டன் டி காக் 14 (13) பிரிட்டோரியஸ் 0 (6) டேவிட் மில்லர் 9 (7) க்ளாஸென் 8 (8) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றி நிலையில் அதிகபட்சமாக வேன் டெர் டுஷன் 20 (20) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சொதப்பல் பண்ட்:
இதனால் ஜூன் 19இல் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் கோப்பையை வென்று விடலாம் என்ற நிலைமைக்கு இந்தியா போராடி வந்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் இதுவரை ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். அதிலும் முன்னின்று பொறுப்புடன் ரன்களை குவிக்க வேண்டிய பேட்ஸ்மேனாக இதுவரை இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் 30 ரன்களை தாண்டவில்லை.

அதிலும் இந்த தொடரில் அவர் அவுட்டான பந்துகளை பார்த்தால்தான் அனைவரையும் கடுப்பாக வைக்கிறது. ஆம் சிங்கிள் எடுக்க வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஒய்ட் போன்ற பந்துகளை வேண்டுமென்றே பவுண்டரி அடிக்கும் வகையில் இழுத்தடிக்கும் அவர் கேட்ச் கொடுத்து அவுட்டாவது தொடர் கதையாகி வருகிறது. ஆங்கிலத்தில் இதை அவுட் சைட் ஆஃப் ஸ்டம் பந்துகள் என்று அழைப்பார்கள். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விராட் கோலி உட்பட பெரும்பாலான உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இந்த பந்துக்களுக்கு தடுமாறி எட்ஜ் வாங்கி அவுட்டாவர்கள்.

- Advertisement -

கவாஸ்கர் எச்சரிக்கை:
டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான பேட்ஸ்மென்கள் அதற்கு தடுமாறாமல் வெளுத்து வாங்குவார்கள். ஆனால் இவர் மட்டும் இந்த தொடரின் 4 போட்டிகளிலும் அதுபோன்ற பந்துகளில் அவுட்டாகி வருகிறார். இதுமட்டுமல்லாமல் 2022இல் ஐபிஎல் உட்பட அவர் எதிர்கொண்ட அனைத்து டி20 போட்டிகளிலும் அதிகபட்சமாக 10 முறை அதுபோன்ற பந்துகளில் அவுட்டாகியுள்ளார். இத்தனைக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதை வெளுத்து வாங்கும் அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத அற்புத சாதனையை படைத்துள்ளார்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்த தொடர் மட்டுமல்லாது மொத்தமாக இதுவரை இந்தியாவுக்காக விளையாடியுள்ள 47 போட்டிகளில் 740 ரன்களை 23.12 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் ஒரே மாதிரியாக அவுட்டாகி வரும் ரிஷப் பண்ட் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 போட்டியில் அவுட்டான விதத்திலிருந்து அவர் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. பவுலர்கள் ஒயிட் பந்துகளை வீசினாலும் தொடர்ந்து அதை அடிக்க அவர் செல்கிறார். அதை அவர் அவ்வளவு கடினமாக அடிக்கக் கூடாது. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் பெரிய ஷாட்கள் அடிப்பதை அவர் நிறுத்த வேண்டும். அம்மாதிரியாக தொடர்ந்து அவுட்டாகிறார். அதை தெரிந்து வைத்துள்ள தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா தனது பவுலர்களை அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பகுதியில் வீச வைத்து விக்கெட்டை எடுத்து விடுகிறார்”

இதையும் படிங்க : தெ.ஆ தொடர் சும்மா பெயருக்கு தான் ! உலககோப்பைக்கு அணித்தேர்வு எப்படி இருக்கும் தெரியுமா? – கங்குலி ஓப்பன்டாக்

“அம்மாதிரியான பந்துகளில் 10 முறை அவர் அவுட்டாகியுள்ளார். அதில் ஒருசில பந்துகளை அவர் அடிக்காமல் விட்டிருந்தால் ஒய்ட் ஆக மாறியிருக்கும். அதை அடிப்பதற்கு சற்று தூரத்தில் இருப்பதால் அவரால் எப்போதும் முழு பவர் கொடுத்து அடிக்க முடியாது. இந்திய கேப்டனாக இருந்து கொண்டு இப்படி தொடர்ச்சியாக ஒரே மாதிரி வலையில் விழுவது நல்லதல்ல” என்று கூறினார்.

Advertisement