இதனால மட்டும் ரஞ்சிக் கோப்பையை காப்பாற்ற முடியாது.. அதையும் செய்ங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 56
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா முதன்மை அணியாக திகழ்வதற்கு ரஞ்சிக் கோப்பை முக்கிய பங்காற்றி வருகிறது என்றே சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாக கொடுக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்திய வீரர்கள் ரஞ்சிக்கோப்பையில் விளையாட யோசிக்கின்றனர். அதன் உச்சமாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

ஆனால் அதை செய்யத் தவறியதால் 2023 – 24 இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அந்த 2 வீரர்களையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக புதிய ஊக்கத்தொகை திட்டத்தையும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதன் படி ஒரு வருடத்தில் 75% டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் போக 45 லட்சம் வழங்கப்படும்.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
அதே சதவிகித போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு 22.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதே போல 50% போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு 30 லட்சமும் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு 15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ராகுல் டிராவிட் முதல் கெவின் பீட்டர்சன் வரை பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளால் மட்டும் ரஞ்சிக்கோப்பை காப்பாற்ற முடியாது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே ரஞ்சிக் கோப்பை போட்டிகளுக்கும் சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே அதில் விளையாடுவதற்கு வீரர்கள் ஆர்வத்தை காட்டுவார்கள் என்று பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பிசிசிஐயின் இந்த முடிவு அற்புதமானது. ஆனால் ரஞ்சிக்கோப்பை டெஸ்ட் தொடருக்கும் ஊட்டமளிப்பதை பிசிசிஐ உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை ரஞ்சிக் கோப்பை தொடருக்கான சம்பளம் 2 அல்லது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டால் அதில் விளையாடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும்”

இதையும் படிங்க: எனக்கு இந்தியா தான் முக்கியம்.. பாகிஸ்தான் வாரியத்தின் 2024 டி20 உ.கோ கோரிக்கையை நிராகரித்த வாட்சன்?

“குறிப்பாக சம்பளம் அதிகமாக கொடுக்கப்படும் போது பல்வேறு காரணங்களை சொல்லி வீரர்கள் வெளியேறுவது குறைந்து விடும்” என்று கூறினார். அத்துடன் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களை விளையாட வைத்தால் தான் ரஞ்சிக்கோப்பை போன்ற தொடர்கள் மீண்டும் பழைய மவுசை பெறும் என்றும் பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். அது போக ஐபிஎல் தொடருக்காக ரஞ்சிக் கோப்பையின் அட்டவணையை மிகவும் நெருக்கமாக உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement