இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கனும்.. லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியுடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர்.

அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெற்றியுடன் விடைபெற்றார். ஒரு வீரராக கிட்டதாக சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்ல முடியாத அவர் தற்போது பயிற்சியாளராக சாம்பியன் பட்டம் வென்று விடைபெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

பாரத ரத்னா:
இந்நிலையில் ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராகவும் என்சிஏ இயக்குனராகவும் பணியாற்றினார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஏராளமான பங்காற்றியுள்ள ராகுல் டிராவிட்டுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போலவே பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அவர் உண்மையிலேயே அப்படித்தான் இருந்தார். சிறந்த வீரரான அவர் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக இந்தியாவிற்கு டெஸ்ட் தொடரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்”

- Advertisement -

“அதே போல இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற மூன்றில் ஒரு இந்திய கேப்டனாக அவர் சாதனை படைத்தது எதையாவது அர்த்தப்படுத்துகிறது. அதன் பின் தேசிய கிரிக்கெட் தலைவராகவும் சீனியர் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த அவர் ஒரு அற்புதமான திறமைசாலி. டிராவிட் சாதனைகள் அனைத்து கட்சி பேதமின்றி, சாதி, மத, சமூகங்களை கடந்து மகிழ்ச்சியை கொடுத்தது”

இதையும் படிங்க: அந்த காரணத்தால் விமர்சிக்குறாங்க.. உண்மையில் ஜெய் ஷா இந்த பாராட்டுக்கு தகுதியானவர்.. கவாஸ்கர் ஆதங்கம்

“அவருடைய சேவை நாட்டுக்கு சொல்லப்படாத மகிழ்ச்சியை கொண்டு வந்தது. எனவே நாட்டின் உயரிய அந்த விருதுக்கு அவர் தகுதியானவர். அனைவரும் வாருங்கள். இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரை அரசு அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்வதில் என்னோடு இணைந்து கொள்ளுங்கள். பாரத ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வது நன்றாக இருக்கிறது அல்லவா” எனக் கூறினார்.

Advertisement