அந்த காரணத்தால் விமர்சிக்குறாங்க.. உண்மையில் ஜெய் ஷா இந்த பாராட்டுக்கு தகுதியானவர்.. கவாஸ்கர் ஆதங்கம்

Sunil Gavaskar
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மேலும் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்துள்ளது. இது போக சமீபத்தில் 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி இந்தியா உலக சாதனை படைத்தது.

அதே போல கடந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது. மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தற்போது தவிக்க முடியாத நாடாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு காரணமாக இருப்பதாக ஜாம்பவான் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 அணிக்கும் ஒரே ஊதியத்தை ஜெய் ஷா கொண்டு வந்ததாக கவாஸ்கர் கூறியுள்ளார். அத்துடன் மகளிர் ஐபிஎல் தொடரை துவக்கியது போன்ற பல வளர்ச்சி திட்டங்களை ஜெய் ஷா உருவாக்கியதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசியல்வாதியின் மகன் என்பதால் பலரும் அவரை விமர்சிப்பதாக கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நிர்வாகத்தின் தரம் எப்போதும் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று நான் நினைக்கிறேன். எப்போதும் சிலருக்கு சில விஷயங்கள் ஏமாற்றமாக அமையும். ஆனால் தற்போதைய தலைமை செய்திருப்பது மிகவும் சிறப்பானது என்று நினைக்கிறேன். தந்தையின் அரசியல் நிலைப்பாடு காரணமாக மக்கள் ஜெய் ஷா மீது விமர்சனம் வைப்பார்கள்”

- Advertisement -

“இருப்பினும் மகளிர் ஐபிஎல் தொடரைக் கொண்டு வந்தது, மகளிர் அணிக்கும் சமமான சம்பளம் கொடுத்தது, ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தியது போன்ற ஜெய் ஷா செய்த சாதனைகள் பாராட்டத்தக்கது. இருப்பினும் அரசியல காரணமாக சிலர் அவருக்கு பாராட்டு கொடுக்க மறுப்பார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்த காலத்திலும் இப்படியா? தோனியின் பிறந்தநாளில் சல்மான் கான் முன்னிலையில்.. ஷாக்சி செய்த செயல்

மேலும் முன்னாள் வீரர்கள் தான் பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். முன்னதாக தனது தந்தையின் அரசியல் பரிந்துரையால் குஜராத் மாநில வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜெய் ஷா 2015இல் பிசிசிஐ நிர்வாகத்தில் இணைந்தார். அதன் பின் 2019இல் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அவர் ஆசிய கவுன்சில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement