23 ஓவர் போடுறது கஷ்டமா? 4வது மேட்ச்ல தோத்துருந்தா என்ன செய்வீங்க.. இந்திய அணியை விளாசிய கவாஸ்கர்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றது.

அந்த வகையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் இங்கிலாந்தை சாய்த்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. இதைத் தொடர்ந்து நடைபெறும் கடைசி போட்டியிலும் இங்கிலாந்து தோற்கடித்து 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:
முன்னதாக இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட பும்ராவுக்கு 4வது போட்டியில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக இந்திய அணி நிர்வாகம் தாமாக ஓய்வு கொடுத்தது. இந்நிலையில் ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் 23 ஓவர்கள் வீசியது பும்ராவை சோர்வடைய வைத்திருக்காது என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு 4வது போட்டியில் ஓய்வு கொடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பும் அவர் இது பற்றி மிட்-டே இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களும் 2வது இன்னிங்ஸில் வெறும் 8 ஓவர்களும் வீசிய பும்ராவுக்கு பயிற்சியாளரின் பரிந்துரைப்படி ராஞ்சியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் 2 மற்றும் 3வது போட்டிகளுக்கு இடையே 9 நாட்கள் இடைவெளி இருந்ததை மறக்க வேண்டாம்”

- Advertisement -

“எனவே மொத்த போட்டியில் 23 ஓவர்கள் வீசுவது ஒருவருக்கு சோர்வை ஏற்படுத்தக் கூடியது அல்ல. அதனால் பும்ராவுக்கு ஏன் ஓய்வு கொடுக்கப்பட்டது? தற்போது நான்காவது போட்டி முடிந்ததும் 5வது போட்டிக்கு முன்பாக 8 நாட்கள் இடைவெளி இருக்கிறது. இது ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடுவதற்கு போதுமான அளவுக்கு ஓய்வெடுத்து ஃபிட்டாகி வருவதற்கான நேரத்தை கொடுக்கிறது. ஒருவேளை 4வது போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தால் இந்தியா கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் 2024 தொடரில் காயம் காரணமாக டேவான் கான்வே விலகல்.. மீண்டும் திரும்ப வாய்ப்பிருக்கா? – விவரம் இதோ

“அந்த முடிவு என்சிஏ அல்லது பும்ராவின் முடிவாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அது அணியின் நன்மைக்காக எடுக்கப்படவில்லை. ஆனால் பும்ரா இல்லாத நிலையில் வாய்ப்பு பெற்ற ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசினார். இது பெரிய வீரர்கள் இல்லாமல் இந்தியா வெல்ல முடியும் என்பதை மீண்டும் காட்டியது. ரோகித் சொன்னது போல அவரை போன்ற இளம் வீரர்கள் பசியுடன் நாட்டுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

Advertisement