எத்தனையாவது முறையாக இருந்தால் என்ன இந்த அணிதான் கோப்பையை வெல்லும் – கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 12 வருடங்களாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒரு சில ஆண்டுகளே பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. அதில் மிக முக்கியமான அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன.

CSKvsMI

- Advertisement -

இந்த முறையும் கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக உழைத்து வருகிறது. ஒருவேளை இந்த முறை வெற்றி பெற்றால் இது ஐந்தாவது முறையாக  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அமையும். இது குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் கூறுகையில்….

எந்த அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று கேட்டால் நான் கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை தான் கை காட்டுவேன். ஏனென்றால் டி20 கிரிக்கெட் தொடரை பொறுத்தவரையில் எந்த ஒரு இடத்திலும் சூழ்நிலை அப்படியே தலைகீழாக மாறிவிடும். ஒரு ஓவரில் ஐபிஎல் தொடரை மாறிவிடும் மேலும் ஏற்கனவே இந்த அணியில் இருக்கும் வீரர்கள் பல இறுதிப் போட்டியில் ஆடி விட்டார்கள்.

அந்த கடினமான நேரத்தை சமாளிக்கும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது இது இது போன்ற அனுபவம் எல்லாம் அவர்களுக்கு சாதகமாக அமையும் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Pollard

இது போன்ற கடினமான சூழ்நிலைகளை அவர்களால் கையாள முடியும் இந்த முறை 5 ஆவது முறையாக கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

Advertisement