மும்பை 2 மைனஸ் இருக்கு. அதை அவங்க சமாளிச்சே ஆகனும் – புட்டு புட்டு வைத்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.

csk-vs-mi

- Advertisement -

இந்நிலையில் இந்த துவக்கப் போட்டியில் மும்பை அணியில் விளையாடும் பிளே லெவன் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு மைதானங்களில் மும்பை அணி எவ்வாறு செயல்படும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது மும்பை அணியில் உள்ள பலவீனங்கள் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது : மும்பை அணிக்கு இந்த தொடரில் இரண்டு பலவீனங்கள் இருக்கின்றன. ஒன்று அந்த அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. சுழற்பந்து வீச்சு சார்பில் ராகுல் சாகர் மட்டுமே இருக்கிறார். அவரை தவிர ஒரு க்ருனால் பாண்டியா மற்றும் ஜெயந்த் யாதவ் இருந்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு பயன்படுவார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

ragul chahar

இரண்டாவது மும்பை அணியில் நான்காவது மற்றும் ஐந்தாவது வரிசையில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் ஒரு பலவீனமாக இருக்கக்கூடும். ஏனெனில் சரியான இடத்தில் யார் இறங்க வேண்டும் என்ற குழப்பம் நிச்சயம் அணிக்கு ஏற்படும். சூர்யகுமார் யாதவ் துவக்க வீரராக இறங்கினால் இஷான் கிஷான் 4-வது வீரராக விளையாட வேண்டும். அப்படி இல்லை என்றால் டிகாக் 3ஆவது இடத்தில் விளையாட வேண்டும் இப்படி பல குழப்பங்கள் இருக்கின்றன.

krunal 2

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் எந்த இடத்தில் யார் இறங்குவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி எழும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் குறிப்பிட்ட மும்பை அணியின் பிளேயிங் அணி இதோ : 1) ரோகித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) குயின்டன் டி காக், 4) இஷான் கிஷான், 5) பொல்லார்ட், 6) ஹர்திக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) நாதன் குல்டர் நைல், 9) ராகுல் சாகர், 10) ட்ரென்ட் போல்ட், 11) பும்ரா

Advertisement