இந்த வருஷம் ஐ.பி.எல் சாம்பியன் இவங்கதான். அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காங்க – கவாஸ்கர் கணிப்பு

Sunil-gavaskar

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது சிறப்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து சென்ற வேளையில் எதிர்பாராதவிதமாக கொல்கத்தா அணியின் வீரரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ இந்த தொடரானது பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தத்தொடரானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

IPL

மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளதால் நிச்சயம் போட்டி வெளிநாடுகளில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற 29 போட்டிகளை வைத்து இந்த ஐபிஎல் தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்ற கணிப்பினை இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசுகையில் : கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக சாம்பியன் அணியாக இருந்த சிஎஸ்கே மீண்டும் இந்த ஆண்டு சாம்பியன் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

CSK

கடந்த ஆண்டு இருந்த அணியில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் இந்த ஆண்டு தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறது. மொயின் அலியை 3வது வீரராக களமிறக்கிய சென்னை அணி ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்களும் சிறப்பாக விளையாடி வருவதால் நடைபெற்ற போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு சிஎஸ்கே அணி இந்த வருஷம் சாம்பியன் பட்டத்தை பெற தகுதியான அணி என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement