
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் காரணமாக 253 ரன்களை குவித்தது. பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி இறுதி வரை வெற்றிக்காக போராடி 246 ரன்களை குவித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த கடைசி கட்ட ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசிய பும்ரா போட்டியின் முக்கியமான 18-ஆவது ஓவரில் ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணி கடைசி இரண்டு ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றிருந்தது.
இந்நிலையில் அவரது இந்த அற்புதமான பந்துவீச்சை பாராட்டி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் : 500 ரன்கள் எடுக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் எனது ஆட்டநாயகன் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் அவர் எந்த போட்டியில் 8.25 எக்கனாமி உடன் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு அணிகளுக்குமே அவர் தான் வித்தியாசமாக இருந்தார் என இர்பான் பதான் பாராட்டினார்.
இதையும் படிங்க : எட்டாவது இந்திய பவுலராக மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ
மேலும் தொடர்ந்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறுகையில் : பும்ரா நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தரமான பந்துவீச்சாளர் என அவரும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.