இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அவர் எடுத்த இந்த விக்கெட்டின் மூலம் எட்டாவது இந்திய வீரராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் சாதனைகயையும் நிகழ்த்தியுள்ளார்.
எட்டாவது இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்களை குவிக்க பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அதிரடியான விளையாடி இலக்கினை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.
இறுதியில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அசத்தலான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 246 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பும்ரா எடுத்த ஒரு விக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 234 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளின் விளையாடியுள்ள அவர் 149 விக்கெட்டுகளையும், 94 டி20 போட்டிகளில் விளையாடி 117 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படி மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து 500 விக்கெட்டுகளை வீழ்த்தி எட்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : அவர் இல்லனா நான் இங்கு இல்ல.. வெற்றிக்கு பிறகு ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய – சஞ்சு சாம்சன்
இவருக்கு முன்னதாக அணில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஜாஹீர் கான் மற்றும் ஜவகர் ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்த வேளையில் தற்போது எட்டாவது இந்திய வீரராக இந்த சாதனை பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார்.



