சர்வதேச கிரிக்கெட்டில் நான் எதிர்கொண்டதிலேயே இவங்க 2 பேர் தான் டேஞ்சர் பவுலர்ஸ் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பட்டியலை பார்க்கும்போது சுனில் கவாஸ்கருக்கு எப்பொழுதும் இந்த லிஸ்டில் டாப்பில் இடம் உண்டு. இந்திய அணியை பொறுத்தவரை கவாஸ்கர் ஒரு ஜாம்பவான் பிளேயர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர் 10,000 டெஸ்ட் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். இவரது காலத்தில் பல்வேறு அதிவேக பந்துவீச்சாளர்களை இவர் எதிர்கொண்டிருக்கிறார்.

gavaskar 1

குறிப்பாக இந்திய அணிக்காக கவாஸ்கர் விளையாடிய காலத்தில் உலகின் அதி பயங்கரமான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஆன மார்ஷல், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஆஸ்திரேலிய சேர்ந்த தாம்சன், டென்னிஸ் லில்லி பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான்கான் இங்கிலாந்தை சேர்ந்த இயான் போத்தம், நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹாட்லி போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடியுள்ளார்.

- Advertisement -

இப்படி அனைத்து அதிவேக பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் தனது சிறப்பான பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள கவாஸ்கர் பெரும்பாலும் ஹெல்மெட் இன்றியே விளையாடியுள்ளார். இவரது ஒருநாள் கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட் ரெக்கார்டு சிறப்பான ஒன்று.

Gavaskar

இந்நிலையில் தற்போது சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தான் எதிர்கொண்டதில் பயந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜெப் தாம்சன் மிகவும் வேகமாக பந்துவீச கூடியவர். அவரால் எப்பொழுதும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த முடியும். அவரது பந்து வீச்சை நம்மால் கணிக்க முடியாது.

- Advertisement -

gavaskar 2

அதேபோன்று ஆன்டி ராபர்ட்ஸ் சிறப்பாக பந்து வீச கூடியவர். ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்களை கடந்து விளையாடினாலும் அவரால் எளிதில் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் விளையாடிய காலத்தில் சிறந்த பேட்ஸ்மென் என்றால் அது விவியன் ரிச்சர்ட்ஸ் தான் என்றும் அவர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

Advertisement