அவங்கள தொல்லை செய்ய மாட்டாரு.. ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்தியாவின் அடுத்த கேப்டன்.. கவாஸ்கர் ஆதரவு

Sunil Gavaskar 2
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்தியா 10 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அதே தொடரின் முதல் போட்டிகள் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே போல கடைசி போட்டியிலும் அவருடைய தலைமையில் இந்தியா கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி இன்னிங்ஸில் காயத்தால் பும்ரா பவுலிங் செய்யாதது இந்தியாவின் வெற்றியை பறித்தது.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:

அந்த வகையில் அடுத்த இங்கிலாந்து தொடரில் பும்ரா கேப்டனாக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளரான அவர் அவ்வப்போது காயத்தை சந்திக்கிறார். அதனால் அவரை முழு நேர கேப்டனாக நியமிப்பது சரியான முடிவாக இருக்காது முகமது கைஃப் போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்ற பவுலர்கள் அல்லது வீரர்கள் மீது அதை செய், இதை செய் என்று அழுத்தத்தை போட மாட்டார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாறாக கேப்டனாக முன்னின்றி முடிந்தளவுக்கு தாமே வெற்றிக்கு போராடுவார் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட பும்ரா தான் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக வேண்டும் என்று கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா தான் அடுத்த கேப்டன். ஏனெனில் அவர் முன்னின்று வழி நடத்துகிறார்”

- Advertisement -

லீடர் பும்ரா:

“அவர் உங்கள் மீது அழுத்தத்தை போடாத ஒரு லீடர். சில நேரங்களில் உங்களுடைய கேப்டன்கள் உங்கள் மீது அழுத்தத்தை போடுவார்கள். ஆனால் பும்ரா மற்ற வீரர்கள் தங்கள் வேலையை செய்தால் போதும் என்று மட்டுமே எதிர்பார்ப்பார். அதனாலேயே அவர்கள் தேசிய அணியில் இருக்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். இல்லையென்றாலும் மற்ற வீரர்கள் மீது அவர் அழுத்தத்தை போடுவது போல் தெரிவதில்லை”

இதையும் படிங்க: 2019 – 2022 மாதிரி மறுபடியும் தடுமாறும் விராட் கோலி.. ஃபார்முக்கு திரும்ப இதான் ஒரே வழி.. பாண்டிங் அட்வைஸ்

“மிட் ஆன், ஆஃப் திசையில் நிற்கும் அவர் புத்திசாலித்தனமாக வீரர்களை கையாளுகிறார். எனவே அவர் அடுத்த கேப்டனாக வந்தால் எனக்கு ஆச்சரியமில்லை. துரதிஷ்டவசமாக அவருக்கு மற்ற பவுலர்கள் கை கொடுக்கவில்லை. அதனால் ஆஸ்திரேலிய தொடரில் தனியாளாக அவர் போராடினார். ஒருவேளை கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸில் பும்ரா விளையாடியிருந்தால் வெற்றி இந்தியாவின் பக்கம் வந்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement