- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலிக்கு சொதப்பவும் உரிமை இருக்கு.. ரசிகர்களுக்கு நன்றி சொன்னதால் ஓய்வு பெற மாட்டாரு.. கவாஸ்கர் பேட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. முன்னதாக அத்தொடரில் விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி இந்திய அணிக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அடிலெய்ட் மைதானத்தில் டக் அவுட்டான அவருக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.

ஏனெனில் இனிமேல் அம்மைதானத்தில் விராட் கோலி மீண்டும் விளையாட 99% வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனர். அதற்கு அவர் தம்முடைய கைகளை உயர்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெற உள்ளதையே விராட் கோலி அப்படி செய்கையால் காட்டினாரா? என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

சொதப்ப உரிமை உண்டு:

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 14000 ரன்கள் அடித்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள விராட் கோலி சில போட்டிகளில் சொதப்பும் உரிமையைக் கொண்டுள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஓய்வு பெறும் எண்ணத்துடன் விராட் கோலி ரசிகர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

“விராட் 14000 ரன்கள், 51 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் அடித்துள்ள அவர் ஆயிரக்கணக்கில் ரன்கள் குவித்துள்ளதால் சில தோல்விகளை சந்திக்க அனுமதிக்கப்படுவார். அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மிஞ்சியுள்ளது. தமக்கு பிடித்த அடிலெய்ட் மைதானத்தில் கடந்த காலங்களில் சதங்கள் அடித்ததால் இம்முறை அவர் மேலே எதிர்பார்ப்பு காணப்பட்டது”

- Advertisement -

ரிட்டையர்மென்ட் இல்லை:

“ஆனால் எப்போதும் சதமடிக்க முடியாது என்பதால் அடுத்தப் போட்டியில் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடலாம். அடிலெய்டில் அவருக்கு நிறைய ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டியதைப் பார்த்தது இதயத்தைத் தொடுவதாக அமைந்தது. இந்த விளையாட்டுக்கு விராட் என்ன செய்துள்ளார் என்பதை ஆஸ்திரேலியர்கள் அங்கீகரித்துள்ளனர். அந்த கரகோஷம் மிகவும் ஸ்பெஷலானது”

“அதற்காக அது முடிவு கிடையாது. விராட் கோலி எளிதில் எதையும் விடக்கூடிய வீரர் கிடையாது. 0, 0 என்ற ஸ்கோர் வந்ததால் அவர் ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் கிடையாது. அவர் 3வது போட்டியிலும் சொந்த மண்ணில் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரிலும் விளையாடுவார். 2027 உலகக் கோப்பையில் ரோஹித்துடன் அவரும் இருப்பார் என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: 38 வயதானால் என்ன? தோனியின் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.. ஆஸியில் 2 புதிய சாதனை

“சொல்லப்போனால் விராட் பெரிய ஸ்கோர் அடிக்காததால் ஆஸ்திரேலியர்களும் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். தமக்கு கரகோஷம் கொடுத்த ரசிகர்களுக்கு விராட் கோலி கையை உயர்த்தி நன்றி மட்டுமே சொன்னார். அதை தவிர எதுவுமில்லை” என்று கூறினார்.

- Advertisement -