38 வயதானால் என்ன? தோனியின் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.. ஆஸியில் 2 புதிய சாதனை

Rohit Sharma Ms Dhoni
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. மறுபுறம் இரு போட்டிகளிலும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய இந்தியா புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் 2 தோல்விகளை சந்தித்து கோப்பையை இழந்தது.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 264/9 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு கேப்டன் கில் 9, விராட் கோலி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 17/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா நங்கூரமாக விளையாடி சரிவை தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

38 வயதில் அசத்தல்:

நேரம் செல்ல அதிரடியாக விளையாடிய அவர் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 2 சிக்ருடன் 73 (97) ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்ரேயாஸ் 61, அக்சர் பட்டேல் 44 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஓரளவு கை கொடுத்தனர். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 46.2 ஓவரிலேயே 265/8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் 11 தொடர் வெற்றிகளுடன் இந்தியா ஃபைனலுக்கு சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இருப்பினும் அவரது தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா 2 கோப்பைகளை வென்றது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று ரோஹித் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தோனியை முந்தி சாதனை:

அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் கேப்டனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது. அதற்காக மனம் தளராத ரோஹித் இப்போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 1071 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 8 வருடம் கழித்து வெற்றி.. வாழ்வா – சாவா போட்டியில் சாதித்த இந்தியா ஃசெமி பைனலுக்கு தகுதி

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 1000 ரன்கள் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படித்துள்ளார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக (1071) ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற எம்.எஸ். தோனியின் சாதனையை உடைத்துள்ள ரோஹித் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தோனி 1028 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

Advertisement