ஐசிசி மகளிர் உ.கோ: 8 வருடம் கழித்து வெற்றி.. வாழ்வா – சாவா போட்டியில் சாதித்த இந்தியா ஃசெமி பைனலுக்கு தகுதி

India womens
- Advertisement -

ஐசிசி மகளிர் 2025 உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி நவிமும்பையில் 24வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே செமி பைனலுக்கு செல்ல முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போது கடைசி நேரத்தில் மழை வந்ததால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த 49 ஓவர்களில் இந்தியா அபாரமாக விளையாடி 340/3 ரன்கள் வைத்தது. அதனால் ஒரு மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தங்களது அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனையும் படைத்தது.

- Advertisement -

வாழ்வா – சவால் போட்டியில்:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தைக் கொடுத்த ஸ்மிருதி மந்தனா சதமடித்து 109 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து அபாரமாக விளையாடிய பிரதிகா ராவல் சதத்தை அடித்து 122 ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் 76* (55) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் மழை வந்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி நியூசிலாந்து வெற்றி பெற 44 ஓவரில் 325 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய நியூசிலாந்து அணி முடிந்தளவுக்கு போராடியும் 44 ஓவரில் 271/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ப்ரூக் ஹல்லிடே 81, இஸ்பெல்லா காஸ் 65* (51) ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

சாதித்த இந்தியா:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட் 2, ரேணுகா சிங் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அதனால் 53 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் செமி ஃபைனலுக்கு கடைசி அணியாக தகுதி பெற்று அசத்தியது. அத்துடன் மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்தை 8 வருடங்கள் கழித்து தோற்கடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: இப்போ சந்தோசமா? துருப்பு சீட்டை பெஞ்சில் வைத்து இந்தியாவின் சோளியை முடித்த கம்பீர்.. ரசிகர்கள் விளாசல்

கடைசியாக 2017 மகளிர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை டெர்பி மைதானத்தில் இந்தியா தோற்கடித்திருந்தது. இதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியை செமி ஃபைனலில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். மறுபுறம் முடிந்தளவு போராடி தோற்ற நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisement