- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் இந்த நிலைக்கு 2014க்கு போன கோலி தான் காரணம்.. சச்சினை பாருங்க.. கவாஸ்கர் கோரிக்கை

பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024 – 25 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பந்து வீசிய இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 51-4 என திண்டாடி வருகிறது. கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். களத்தில் ராகுல், கேப்டன் ரோஹித் போராடி வருகிறார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் ஏமாற்றம்:

இந்நிலையில் 2014 இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக அவுட் சைட் ஸ்டம்ப் பந்துகளுக்கு எதிராக அவுட்டானது போல 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தொடர்ந்து அவுட்டாவதாக சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் பேட்டிங் என்பது ரன்கள் குவிப்பதை பற்றியது மட்டும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்போட்டியில் குறைந்தபட்சம் ஃபாலோ ஆன் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமாறு அவர் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை ஏற்கனவே விவாதித்துள்ளோம். இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸில் அவர் 4 முறை இதே போல அவுட்டாகியுள்ளார். அது 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அவர் தடுமாறியதை எனக்கு நினைவூட்டுகிறது. அந்த சமயத்தில் கூட விராட் கோலி புதியவராக இருந்ததால் ஆண்டர்சனை எதிர்கொள்வது சிரமமாக இருந்திருக்கும்”

- Advertisement -

சச்சினை பாருங்க:

“ஆனால் இப்போதும் அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை துரத்தி சென்று அவுட்டானார். அதனாலேயே இன்று இந்தியா இந்த நிலையில் இருக்கிறது. அவர் நன்றாக விளையாடியிருந்தால் இந்தியா இன்னும் நல்ல நிலையில் இருந்திருக்கும். இப்போதாவது சச்சின் டெண்டுல்கரின் அணுகுமுறையை விராட் கோலி எடுத்துக் கொள்ள வேண்டும். சச்சின் ஆஃப் சைட் திசையில் அடிக்காமலேயே 2004 சிட்னி போட்டியில் 241 ரன்கள் குவித்தார்”

இதையும் படிங்க: ஸ்டார்க்கிடம் தப்பிக்க சச்சின் மாதிரி ராகுல் முடிவெடுக்கனும்.. ஜெய்ஸ்வாலிடம் இதை சொல்லுங்க.. புஜாரா 2 அட்வைஸ்

“எனவே சச்சின் டெண்டுல்கரை ரசிக்கும் விராட் கோலி அவருடைய பாதையை எடுத்துக்கொள்ள வேண்டும். அது அடுத்த 2 போட்டிகளில் அவருக்கு உதவலாம். டெஸ்ட் பேட்டிங் என்பது ரன்கள் அடிப்பதை பற்றியது மட்டும் கிடையாது. களத்தில் நின்று விளையாடுவதாகும். அதை செய்தாலே ரன்கள் தாமாக வரும். இங்கிருந்து மற்ற வீரர்களாவது தவறிலிருந்து கற்றுக்கொண்டு 246 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவு வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -