- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முடிஞ்சா பேட்டால் பதிலடி கொடுங்க.. அதை விட்டுட்டு அவங்களோட மோதி ஹீரோவாகாதீங்க.. கோலியை சாடிய கவாஸ்கர்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா ஏமாற்றத்துடன் திரும்பியது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற முடியாமல் இந்தியா முதல் முறையாக பரிதாபமாக வெளியேறியது.

அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முதல் போட்டியில் அடித்த சதத்தை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட்டான அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இதற்கிடையே 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் தோளில் விராட் கோலி இடித்தார்.

- Advertisement -

ரசிகர்களுடன் மோதல்:

அதனால் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதே போல ஆஸ்திரேலிய ஊடகமும் விராட் கோலியை கோமாளி என்று முகப்பு பக்கத்தில் சித்தரித்து மோசமாக விமர்சித்தது. அதன் காரணமாக பவுண்டரிக்கு அருகே நிற்கும் போதெல்லாம் ஆஸ்திரேலிய ரசிகர்களுடன் அவ்வப்போது விராட் கோலி மோதினார்.

அதன் உச்சமாக கடைசி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் போல நான் உப்பு காகிதத்தை பயன்படுத்தி ஏமாற்றவில்லை என ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி சைகையால் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் உங்களால் முடிந்தால் பேட்டால் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர எதிரணி ரசிகர்களுடன் மோதி ஹீரோவாக முயற்சிக்கக்கூடாது என விராட் கோலியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:

“விராட் கோலி தோளில் இடித்தது கிரிக்கெட் கிடையாது. சீண்டினால் இந்தியர்கள் பதிலடி கொடுக்க வெட்கப்பட மாட்டார்கள். ஆனால் விராட் கோலி அப்படி செய்ய எந்த காரணமும் இல்லை. ரசிகர்கள் மைதானத்திற்கு தங்களுடைய நல்ல நேரத்தை உருவாக்க வருகிறார்கள். அவர்கள் வீரர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். தங்களுக்கு தாங்களே பொழுது போக்கிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள்”

இதையும் படிங்க: சிரிப்பு வர மாதிரி அஸ்வின் ஓய்வு பெற.. ஐடியா இல்லாத இந்திய அணி தான் காரணம்.. ப்ராட் ஹாடின்

“அப்படி பொழுதுபோக்க முயற்சிக்கும் ரசிகர்களிடம் நீங்கள் மோதுவது நல்லதல்ல. சொல்லப்போனால் அது தீங்கை ஏற்படுத்தக் கூடியது. அவ்வாறு செய்வது தன்னுடைய சக அணி வீரர்களுக்கு நிறைய அழுத்தத்தை உண்டாக்கும் என்பதை விராட் கோலி புரிந்து கொள்ள வேண்டும். அதே போல ரசிகர்களின் குறியாக மாறிய விராட் கோலி அவுட் சைட் ஆஃப் பந்துகளில் தொடர்ந்து அவுட்டானார். அதில் கவனம் செலுத்தியிருந்தால் இந்திய அணி பெரிய ஸ்கோர் குவிக்க உதவியிருக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -