2 வருசமா எதுவும் சரில்ல.. ஓஞ்சு போய்ட்டாரு.. ரோஹித் சர்மா பதவி நீக்கம் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து தங்களுடைய கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2012 வரை சச்சின் தலைமையில் கூட ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோகித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அத்துடன் 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக முன்னேற்றி இன்று இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தரத்திலும் அனுபவத்திலும் உயர்ந்த நிற்கும் ரோஹித் சர்மாவை நன்றி மறந்து கழற்றி விட்டதால் கோபமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:
குறிப்பாக ரோகித் சர்மா நீக்கப்பட்ட ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மும்பை அணியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு ரோகித் சர்மா சற்று ஓய்ந்து விட்டதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனாலேயே அவருடைய தலைமையில் கடந்த சில வருடங்களாக மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்ததாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அதை விட சமீபத்திய வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்து வருவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது சரியான முடிவு என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நாம் இதில் சரி மற்றும் தவறுகளை பார்க்கக்கூடாது. ஆனால் இந்த முடிவு அணிக்கு நன்மை செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது”

- Advertisement -

“அதே சமயம் கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் குறைந்து விட்டது. முன்பெல்லாம் அவர் அதிரடியாக பெரிய ரன்கள் குவிப்பார். ஆனால் சமீப காலங்களில் அவர் சுமாராக செயல்பட்டதாலயே கடந்த 2 வருடங்களாக மும்பை 9, 10வது இடத்தை பிடித்தது. கடந்த வருடம் போராடி பிளே ஆஃப் வரை மட்டுமே சென்றது. அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அட்டகாசமாக விளையாடிய ரோகித் சர்மாவை சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் நம்மால் பார்க்க முடியவில்லை”

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க கீப்பர் செய்த தவறால் அறிமுகப்போட்டியில் அரைசதம் கடந்த சாய் சுதர்சன் – நடந்தது என்ன?

“ஒருவேளை இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் தொடர்ச்சியாக விளையாடியதால் சற்று களைப்படைந்திருக்கலாம். மறுபுறம் குஜராத்துக்கு முதல் வருடம் கோப்பையை வென்ற பாண்டியா 2வது வருடம் ஃபைனல் அழைத்துச் சென்றதால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பைக்கும் தற்போது புதுமையாக சிந்திக்கக் கூடிய ஒருவர் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement