ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பாரடர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது. இந்த தொடரில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் அசத்தியது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
அதில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடாத நித்திஷ் ரெட்டி தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். அப்போது நித்திஸ் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட சரியானவரா? என்று சுனில் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். ஆனால் முதல் போட்டியிலேயே 42, 38* ரன்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
கவாஸ்கர் பாராட்டு:
மேலும் 4வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து சதத்தை அடித்து 114 ரன்கள் குவித்த நித்திஷ் ரெட்டி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட அவர் பந்து வீச்சிலும் சில விக்கெட்டுகளை எடுத்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை விட நிதிஷ் ரெட்டி சிறப்பாக வர முடியும் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
அதற்கு இந்திய அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும் மெருகேற்ற வேண்டும் என்று கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மெல்போர்ன் டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு ஒளிமயமான நிதிஷ் ரெட்டி எனும் இளம் வீரரை கொண்டு வந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத அவர் ஹைதராபாத் ஐபிஎல் அணியில் அசத்தியதால் இந்திய அணிக்குள் வந்தார்”
பாண்டியாவை விட:
“அந்த வழியில் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழைத்து வந்ததற்கான பாராட்டு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை சேரும். தனது அறிமுகப் போட்டியிலேயே அவர் சூழ்நிலையை அறிந்து விளையாடக்கூடிய கிரிக்கெட்டர் என்பதை காட்டினார். அதற்கடுத்த ஒவ்வொரு போட்டிகளிலும் அவரிடம் இருக்கும் நல்ல திறன்கள் தோள்களில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை பார்க்க முடிந்தது”
இதையும் படிங்க: சபாஷ் கம்பீர் இதை செய்யாம முடிச்சுட்டீங்க.. இந்தியாவை சரித்த பண்ட்டையும் விளாசிய பசித் அலி
“மெல்போர்னில் இந்திய அணி சரிந்த போது அற்புதமான சதத்தை அடித்த அவர் நீண்ட காலத்திற்கு தன்னுடைய இடத்தை நிலை நிறுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா விளையாடுவதில்லை. அதனால் இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை தேடிக் கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்கு நித்திஷ் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் டெஸ்ட் பேட்டிங்கில் அவர் பாண்டியாவை விட கண்டிப்பாக வரும் நேரங்களில் சிறந்தவராக இருப்பார்” என்று கூறினார்.



