சபாஷ் கம்பீர் இதை செய்யாம முடிச்சுட்டீங்க.. இந்தியாவை சரித்த பண்ட்டையும் விளாசிய பசித் அலி

Basit Ali
- Advertisement -

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.

அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. இந்நிலையில் 4வது போட்டியில் கடைசி நாளில் தோல்வியை தவிர்த்து டிராவை பதிவு செய்ய முடியாத அளவுக்கு கௌதம் கம்பீரின் பயிற்சி மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். அதே போல 30 (104) ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் நன்கு செட்டிலானார்.

- Advertisement -

சபாஷ் கம்பீர்:

அப்போது டிராவிஸ் ஹெட் போன்ற பகுதி நேர பவுலரிடம் விக்கெட்டை பரிசளித்த அவர் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டதாகவும் பசித் அலி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் சாருக்கு சபாஷ். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடது – வலது கை கலவையை வைத்து தோல்வியை பெற்றுக் கொடுத்தீர்கள். இங்கே நல்ல ஃபார்மில் இருக்கும் நித்திஷ் ரெட்டியை அதே காரணத்தால் 6வது இடத்தில் விளையாட அனுப்பவில்லை”

“ஒருவேளை நிதிஷ் அவுட்டானாலும் நீங்கள் பயிற்சியாளராக அவரை 6வது இடத்தில் விளையாட வைத்து புதிதாக முயற்சித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிவுறுத்தாத இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனியான பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நேரமாகும்”

- Advertisement -

சுமாரான பண்ட்:

“80, 90களில் விளையாடிய வீரர்களுக்கும் இப்போதுள்ள வீரர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்போதுள்ள வீரர்கள் இவர் நம்முடைய விக்கெட்டை எடுக்கத்தான் வருகிறார் என்று விரைவாக புரிந்து விளையாடுவார்கள். அப்போதுள்ள வீரர்கள் ஹெட் போன்ற பவுலரிடம் விக்கெட்டை கொடுக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: இனியும் பைனலுக்கு போக இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. எனவே இந்த மாற்றத்தை செய்யுங்க – கவாஸ்கர் அட்வைஸ்

“ஒருவேளை அதிரடியாக விளையாட முயற்சித்தாலும் அது தரையோடு தரையாக இருக்கும். ஆனால் அதை செய்யாத ரிஷப் பண்ட் சிக்ஸர் அடிக்க முயற்சித்து முட்டாள் போன்ற வேலையை செய்தார். அவரால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? இந்திய அணி மற்றும் இந்திய நாடு. அந்த விக்கெட் தான் மொத்த போட்டியையும் மாற்றியது. கடவுள் உங்களுக்கு மூளையை கொடுத்து இருக்கிறார். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement