- Advertisement -
ஐ.பி.எல்

தோனி ஓய்வானாலும் அவங்க நல்லதுக்கு தான் செய்வாரு.. சிஎஸ்கே ஏலத்தில் அந்த துறையை மாத்தனும்.. கவாஸ்கர் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பம் முதலே பேட்டிங் துறையில் தடுமாறிய சென்னை 10 போட்டிகளில் 8 தோல்வி 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியுள்ளது.

மேலும் 2024, 2025 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறியுள்ளது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே 43 வயதாகும் எம்.எஸ். தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது கேள்வியாக இருக்கிறது. அது பற்றி கேட்டதற்கு முதலில் அடுத்த போட்டிக்கு வருவேனா என்பதே தமக்கு தெரியாது என்று தோனி ஜாலியாக பதிலளித்தார்.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:

இந்நிலையில் தோனி தொடர்ந்து விளையாடினாலும் ஓய்வு பெற்றாலும் அது சிஎஸ்கே அணிக்கு நன்மையை பொறுத்தே செய்வார் என்று ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் உண்மையில் அடுத்த வருடம் சிஎஸ்கே அசத்துவதற்கு தரமான பவுலர்களை தான் வாங்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“எந்த வீரரும் தங்களுக்காக முடிவுகளை எடுக்க மாட்டார்கள். அணிக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை வைத்து முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் விளையாடுவது பற்றி எம்.எஸ். தோனி எடுத்த எந்த முடிவாக இருந்தாலும் அது சிஎஸ்கே அணியின் நலனுக்காக எடுக்கப்பட்டதாகும். வருங்காலத்தில் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சிஎஸ்கே நலனுக்காகவே இருக்கும்”

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:

“சிஎஸ்கே முதலில் ஏலத்தில் சரியான திட்டத்தை உருவாக்க வேண்டும். மற்ற அணிகளைப் போல அவர்களுடைய வருங்கால வீரர்களைக் கண்டறியும் குழு சரியாக செயல்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற ஊர்களில் நடைபெறும் உள்ளூர் தொடர்களை மட்டும் பார்த்து இளம் வீரர்களை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் அங்கே சிறிய மைதானத்தில் சாதாரண பவுலர்கள் வீசும் பந்து வீச்சில் எந்த தாக்கமும் இருக்காது”

இதையும் படிங்க: அஷ்வின் மட்டுமில்ல அந்த 2 பேரையும் சேர்த்து தூக்குங்க.. அதுதான் சி.எஸ்.கே அணிக்கு நல்லது – பத்ரிநாத் ஆவேசம்

“அந்தத் தொடரில் அடித்து நொறுக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சர்வதேச பவுலர்களை எதிர்கொள்ளும் போது சொதப்பி விடுவார்கள். எனவே இளம் வீரர்களை கண்டறியும் போது பவுலர்கள் மீது அதிகமாக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பவுலிங் துறையை வலுப்படுத்துவது முக்கியம். ஏனெனில் உங்களுடைய பவுலர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை கட்டுப்படுத்தினால் வெற்றிக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -