இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 2025/26 ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றி பெற்று நிம்மதி பெரும் மூச்சு விட்டது.
இருப்பினும் அந்தப் போட்டி வெறும் 2 நாட்களில் முடிந்தது சர்ச்சையை உண்டாக்கியது. ஏற்கனவே அத்தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியும் 2 நாட்களில் முடிந்திருந்தது. அந்தளவுக்கு பெர்த் பிட்ச் வேகத்துக்கு சாதகமாகவும் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் இருந்தது. இருப்பினும் அந்த மைதானத்தின் பிட்ச்சுக்கு ஐசிசி “நன்று” என்ற ரேட்டிங்கை வழங்கியது.
இந்தியான்னா மோசம்:
அந்த சூழ்நிலையில் தற்போது 4வது போட்டியும் 2 நாட்களில் முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் இந்தியாவில் 3 நாட்களுக்குள் முடிந்த போட்டிகளின் பிட்ச்களுக்கு ஐசிசி “மோசம்” என்ற ரேட்டிங்கை வழங்கியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 2 நாட்களில் நடைபெறும் போட்டிகளின் பிட்ச்களுக்கு ஐசிசி நன்று, மிக நன்றி என்ற ரேட்டிங்கை வழங்குவதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
அதற்கு ஆஸ்திரேலியாவின் பிட்ச்கள் நன்றாக இருப்பதாக ஐசிசிக்கு பரிந்துரைத்த 2 அம்பயர்களை அவர் விமர்சித்தது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் மற்றொரு டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்துள்ளது. அது வியாபாரத்துக்கு நல்லதல்ல என்று ஆஸ்திரேலியா வாரியத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். மெல்போர்னில் கொடுக்கப்பட்ட ஆடுகளத்தின் தரம் பற்றி இந்தியாவில் உள்ள ரசிகர்கள் கத்துகிறார்கள்”
கவாஸ்கர் விமர்சனம்:
“பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியின் பிட்ச் மிகவும் நன்றாக இருந்தது என்ற மதிப்பீட்டை நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கிய போது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். தற்போது மெல்போர்ன், சிட்னி மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு ஃஜெப் க்ரோ நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இம்முறை ரேட்டிங் கொஞ்சம் மாறுபடலாம். பெர்த்தில் 32 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் மெல்போர்னில் 36 விக்கெட்டுகள் விழுந்துள்ளது”
இதையும் படிங்க: ஆல் ஃபார்மட்டிலும் கிங் கோலி மாதிரி.. சுப்மன் கில்லால் இந்த 2 வேலையை செய்ய முடியாது.. பனேசர் வெளிப்படை
“அதனால் பெர்த்துக்கு மடுகல்லே கொடுத்த “மிகவும் நன்று” ரேட்டிங்கில் இருந்து க்ரோ மிகவும் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு மெல்போர்ன் பிட்ச்க்கு “நன்று” ரேட்டிங்கை கொடுக்கக்கூடும். அப்படி நடந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது மெல்போர்ன் மைதானத்தின் பராமரிப்பாளர் தெரியாமல் செய்து விட்டார் அல்லது மனித தவறு என்று சொல்வார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் இந்தியாவில் உள்ள மைதான பராமரிப்பாளர்கள் மோசமானவர்கள் என்று சொல்வார்கள்” எனக் கூறினார்.



