ஆல் ஃபார்மட்டிலும் கிங் கோலி மாதிரி.. சுப்மன் கில்லால் இந்த 2 வேலையை செய்ய முடியாது.. பனேசர் வெளிப்படை

Monty Panesar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில்லை வளர்க்க நினைக்கும் தேர்வுக்குழுவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அசத்தினார்.

இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவித்தத் தடுமாறிய காரணத்தால் அவர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அந்த நிலையில் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் முதல் தொடரிலேயே இங்கிலாந்தில் 950+ ரன்கள் அடித்த அவர் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.

- Advertisement -

ஆல் ஃபார்மட் கிங் விராட் கோலி:

ஆனால் அந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்திய டி20 துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவருக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் தடுமாறிய அவர் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டியில் அரை சதம் கூட அடிக்கவில்லை.

அதன் காரணமாக 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியிலிருந்து சுப்மன் கில்லை கடைசி நேரத்தில் தேர்வுக்குழு கழற்றி விட்டது. அதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக கில் வளர்வதில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல சுப்மன் கில்லிடம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தும் திறமையில்லை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

- Advertisement -

சுப்மன் கில்லால் முடியாது:

அதனால் ஆல் ஃபார்மெட்டிலும் அவரால் விராட் கோலி போல கேப்டனாக செயல்படுவது கடினம் என்றும் பனேசர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் மனநிறைவான கிரிக்கெட்டர். அவரிடம் நிறைய திறமையும் இருக்கிறது. ஆனால் அவர் சோம்பேறித்தனமான ஷாட்டுகளை அடிக்கிறார். விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் தீவிரமான ஆக்ரோஷமான வீரர்”

இதையும் படிங்க: இந்திய ஒருநாள் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் திரும்புவது எப்போது? வெளியான தகவல் – விவரம் இதோ

“அதை சுப்மன் கில்லால் செய்ய முடியாது. அவருக்கு அதிகப்படியான பாரம் கொடுக்கப்படுகிறது. அவரால் அனைத்து ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருக்க முடியாது. ஏனெனில் அது அவருக்கு அதிகப்படியானது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி விராட் கோலியை அதிகம் மிஸ் செய்யாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிஸ் செய்யும். குறிப்பாக விராட் கோலி இல்லாதது இந்திய அணியின் தீவிரத்தன்மையில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

Advertisement