அப்போவே சொன்னேன் கேட்கல.. விராட், ரோஹித் சொதப்பலுக்கு இதான் காரணம்.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 93 வருடங்களில் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட்டிங் செய்யாதது முக்கிய காரணமானது.

குறிப்பாக நியூசிலாந்து ஸ்பின்னர்களை சீனியர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணமானது. சொல்லப்போனால் வங்கதேசத்துக்கு எதிரான கடந்த தொடரிலும் அவர்கள் பெரியளவில் ரன்கள் குவிக்கவில்லை. இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற முதன்மை வீரர்கள் துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சொதப்பலுக்கு காரணம்:

கடந்த இலங்கை ஒருநாள் தொடருக்கு பின் இந்திய வீரர்கள் ஒரு மாதத்திற்கு மேல் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அப்போது துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ஆனால் அதில் நட்சத்திர வீரர்கள் என்ற சிறப்பு சலுகையுடன் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு மட்டும் பிசிசிஐ விடுப்பு கொடுத்தது.

அப்போதே அவர்கள் துலீப் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். தற்போது அது பற்றி மீண்டும் அவர் பேசியது பின்வருமாறு. “சிறந்த வீரர்கள் கூட கடினமான காலங்களில் இருப்பார்கள். இந்த தொடரின் மூன்று போட்டிகளில் இருந்த ஆடுகளங்களும் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. அது போன்ற மைதானங்களில் சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை”

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:

“கேட்ச் தவற விடுவது, எல்பிடபிள்யூ உங்களுக்கு சாதகமாக இருப்பது போன்றவற்றை சொல்லலாம். ஆனால் நீங்கள் மோசமான காலங்களில் இருக்கும் போது அனைத்தும் உங்களுக்கு எதிராக செல்லும். அவற்றைத் தவிர்க்க அவர்கள் கொஞ்சம் பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் நீண்ட இடைவெளியை கொண்டிருந்தார்கள். நாம் வங்கதேசத்தை தோற்கடித்ததால் நியூசிலாந்துக்கு எதிராக எளிதாக வெல்லலாம் என்ற எண்ணத்துடன் சென்றோம்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் எப்படி அவுட்? இந்தியாவின் வெற்றியை பறித்த அம்பயர் மீது ஏபி டீ வில்லியர்ஸ் அதிருப்தி

“ஆனால் நியூசிலாந்து சிறந்த பவுலிங்கை கொண்டிருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய மைதானங்களை பற்றி நன்கு தெரிந்த வைத்துள்ளார்கள். அந்த வகையில் பாதிக்கும் ஏற்பட்ட நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். அதனால் அவர்களுக்கு இங்குள்ள மைதானங்கள் பற்றிய ஐடியா தெரியும். ஆனால் வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடிய வீரர்” என்று கூறினார்.

Advertisement