ரிஷப் பண்ட் எப்படி அவுட்? இந்தியாவின் வெற்றியை பறித்த அம்பயர் மீது ஏபி டீ வில்லியர்ஸ் அதிருப்தி

Ab De Villiers
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.

முன்னதாக இத்தொடரில் மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 147 ரன்களை துரத்தியது. அப்போது நிறைய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 (57) ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

சர்ச்சை தீர்ப்பு:

அதனால் கண்டிப்பாக வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அஜாஸ் பட்டேல் வீசிய ஒரு பந்தை தடுக்க முயற்சித்து தவற விட்டார். அது அவருடைய பேட்டில் உரசிக்கொண்டு சென்று விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது. அப்போது நியூசிலாந்து அணியினர் அவுட் கேட்ட போதும் களத்தில் இருந்த முதல் நடுவர் கொடுக்கவில்லை. பின்னர் நியூசிலாந்து அணியினர் டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்தனர்.

அதை சோதித்த போது ரிஷப் பண்ட் பேட்டில் பந்து உரசியது போல அல்ட்ரா எடுத்து தொழில்நுட்பத்தில் காண்பிக்கப்பட்டதால் 3வது நடுவர் அவுட் கொடுத்தார். அது கடைசியில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்க்கு எதிராக வழங்கப்பட்டது சரியான தீர்ப்பாக இருக்கும் என்று தாம் கருதவில்லை என தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏபிடி அதிருப்தி:

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மீண்டும் ஒருமுறை இருளான பக்கங்களால் சர்ச்சை. ரிஷப் பண்ட் பேட் அதில் பட்டதா இல்லையா? பந்து அவருடைய பேட்டை தாண்டும் போது பேட் அவரின் காலிலும் உரசுகிறது. அந்த சத்தத்தை ஸ்னிக்கோ எடுத்துக்கொண்டது. ஆனால் பேட் அவருடைய காலில் பட்டதா என்பதை எவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்?”

இதையும் படிங்க: இப்போகூட தோனி கூப்பிட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறேன்.. விருப்பத்தை தெரிவித்த – டேல் ஸ்டெய்ன்

“எனவே உண்மையில் அங்கே சந்தேகம் இருக்கிறது. இப்படி ஒரு டெஸ்ட் போட்டியின் மிகப்பெரிய தருணத்தில் இது போன்ற விஷயங்கள் நடப்பதை பற்றி நான் எப்போதும் கவலைப்படுகிறேன். ஹாட்ஸ்பாட் டெக்னாலஜி எங்கே? இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் களத்தில் இருந்த நடுவர் கொடுத்த முடிவை மீண்டும் பின்பற்றியிருக்க வேண்டும். இங்கே நான் ஒருதலை பட்சமாக இருக்கவில்லை. சரியான முடிவு மற்றும் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்துவதை பற்றி சொல்கிறேன்” என்று கூறினார்.

Advertisement