ஈஸியா வெற்றியை விட்டுக்கொடுத்த இந்தியா.. 3வது ஒன்டேவில் சோதனை செய்யக்கூடாது.. கம்பீருக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை நியூசிலாந்து 47.3 ஓவரில் தொட்டு வெற்றி பெற்றது

அதனால் சமநிலையில் இருக்கும் இத்தொடரை வெல்ல கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்த்ததாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா வெற்றியை எளிதாக விட்டுக் கொடுத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கோட்டை விட்ட இந்தியா:

எனவே தொடரை வெல்ல 3வது போட்டியில் சோதனைகளை செய்யாமல் அர்ஷ்தீப் சிங் உட்பட முதன்மையான 11 வீரர்களை தேர்ந்தெடுக்குமாறு அவர் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து எளிதாக வெற்றிக்கோட்டை தாண்டியது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனெனில் நியூசிலாந்து தங்களுடைய பேட்டிங்கை மிகவும் மெதுவாக துவங்கியது”

“அதனால் இந்தியா ஸ்லோ பிட்ச்சை பயன்படுத்தி வெல்லும் என்று அனைவரும் நினைத்தார்கள். நியூசிலாந்து பவுலர்கள் அனைவருமே ஸ்லோவாக பிட்ச்சை சிறப்பாக பயன்படுத்தினார்கள். அதே போல இந்தியாவும் பந்து வீசி நியூசிலாந்தை 260 – 270 ரன்கள் கட்டுப்படுத்தும் என்று கருதப்பட்டது. அதனால் இந்தியா எளிதாக வெல்லும் என்று நான் நினைத்தேன்”

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:

“ஆனால் அதையும் தாண்டி வென்ற நியூசிலாந்துக்கு முழு பாராட்டுக்கள். குறிப்பாக வில் எங் – டேரில் மிட்சேல் அமைத்த பார்ட்னர்ஷிப் போட்டியை இந்தியாவிடமிருந்து பறித்தது. சொல்லப்போனால் இந்தியா 300 ரன்கள் அடித்திருந்தால் கூட அதை சேசிங் செய்திருப்போம் என்பதை அவர்கள் காண்பித்தனர். அதற்காக மிட்சேல் மிகப்பெரிய பாராட்டுகளை பெற வேண்டும். சதத்தை தாண்டிய பின்பும் தொடர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த அவர் தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் அர்ப்பணிப்பைக் காண்பித்தார்”

இதையும் படிங்க: நியூசி அணிக்கு எதிராக எந்தவொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை செய்த – கே.எல் ராகுல்

“தற்போது கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தால் இந்தியா அழுத்தத்தை சந்திப்பார்கள். ஒருவேளை ராஜ்கோட்டில் வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் போன்றவருக்கு வாய்ப்பளித்து கொஞ்சம் சுதந்திரத்துடன் சோதனைகளை நிகழ்த்தியிருப்பார்கள். ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பில்லை. அவர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement