நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி 14-ம் தேதியன்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் குவித்திருந்தது. பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது :
கே.எல் ராகுல் நிகழ்த்திய அசத்தல் சாதனை :
இந்திய அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 47.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் ஐந்தாவது வீரராக களமிறங்கி 92 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 112 ரன்களை அடித்திருந்தார்.
அவர் அடித்த இந்த சதம் ஒருநாள் போட்டிகளில் அவரது எட்டாவது சதமாக பதிவாகியிருந்தது. அதன் காரணமாக அவர் சில குறிப்பிட்ட சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் வேறு எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் செய்யாத ஒரு சாதனையை கே.எல் ராகுல் செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நம்பர் 4 அல்லது அதற்கு கீழே களமிறங்கி விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அதிக சதங்களை அடித்த வீரராக கே.எல் ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளார். கே எல் ராகுல் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 2 சதங்களை விளாசியுள்ளார்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை அணியிலிருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து பேசிய – குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி
இந்த பட்டியலில் ஏ.பி.டி வில்லியர்ஸ், ஜாஸ் பட்லர், சாய் ஹோப் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்து அடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஜனவரி 18-ஆம் தேதி இந்தூரில் நடைபெறயிருக்கிறது.



