ஹனிமூன் முடிஞ்சுடுச்சு.. ஆஸியில் கம்பீர் இதை செய்யலன்னா.. அபிஷேக் நாயர் எதுக்கு? கவாஸ்கர் கேள்வி

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த வாரம் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாறு காணாத அளவுக்கு நியூசிலாந்திடம் முதல் முறையாக தோற்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா வெல்லுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இருப்பினும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக தோல்வியில் இருந்து மீண்டெழுந்து வெற்றி பெறுவதற்கான வேலைகளில் இந்திய அணியினர் ஈடுபட உள்ளனர். அது போன்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு கௌதம் கம்பீர் பயிற்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:

ஏனெனில் நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. இந்நிலையில் அபிஷேக் நாயர், ரியான் டஸ்சேட் ஆகியோர் துணைப் பயிற்சியாளர்களா அல்லது பேட்டிங் பயிற்சியாளர்களா என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் அவர்களை விட கௌதம் கம்பீர் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

எனவே ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கௌதம் கம்பீர் தான் வெற்றிக்கான பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீருக்கு ஹனிமூன் காலங்கள் முடிந்து விட்டது. அவருடைய அந்த ஹனிமூன் காலங்களில் செய்த தவறுகளை நாம் புதியவர் என்பதால் மன்னித்தோம்”

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர்:

“ஆனால் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் நம்முடைய இந்திய வீரர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். உண்மையில் இந்திய பேட்டிங் துறையில் அபிஷேக் நாயரின் வேலை என்ன? அவர் பேட்டிங் பயிற்சியாளரா அல்லது துணைப் பயிற்சியாளரா? அபிஷேக், ரியான் ஆகிய இருவரையும் விட கம்பீர் நிறைய ரன்கள் குவித்துள்ளார்”

இதையும் படிங்க: கவாஸ்கர் சொல்வதில் தப்பே இல்ல.. ரோஹித் சர்மாவை கடந்து செல்லும் நேரம் வந்தாச்சு – ஆகாஷ் சோப்ரா கருத்து

“எனவே அவர்கள் இருவர்களை காட்டிலும் கம்பீர் இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் சரியாக வழி நடத்தினால் நமது அணி நன்றாக செயல்படுவதை பார்க்க முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அபிஷேக் நாயர், ரியான் டஸ்சேட் ஆகியோர் பெயருக்காக மட்டுமே பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். ஏனெனில் அவர்களுடைய தாக்கம் இதுவரை இந்திய அணியின் செயல்பாடுகளில் வெளிப்படவில்லை.

Advertisement