ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகியுள்ள வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
கவாஸ்கர் சொல்வதில் எந்த தப்பும் இல்ல :
அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நவம்பர் 21-ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். இதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நவம்பர் 10-ஆம் தேதி ஆஸ்திரேலியா பயணிக்க உள்ள வேளையில் இந்திய அணியுடன் கேப்டன் ரோகித் சர்மா பயணிக்க மாட்டார் என்றும் மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் சில தகவல்கள் வெளியாக்கின. இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மாவும் தான் இன்னும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒருவேளை அப்படி ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட செல்லவில்லை என்றால் அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சாதாரணமான வீரராக தான் விளையாட வேண்டும் என்றும் பும்ராவை கேப்டனாக மாற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :
ரோகித் சர்மா எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் கேப்டனாக விளையாட கூடாது என்று சுனில் கவாஸ்கர் கூறியது சரிதான். ஏனெனில் ஒரு அணியின் கேப்டன் முதல் போட்டியில் விளையாடவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறு. கடந்த முறை விராட் கோலி ஒரு போட்டியில் விளையாடிவிட்டு அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.
இதையும் படிங்க : ஆச்சரியத்தை அளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.. ஏமாற்றத்தை கொடுத்த பென் ஸ்டோக்ஸ் – சூடுபிடிக்கும் மெகா ஏலம்
ஆனாலும் முன்கூட்டியே அவர் அதனை தெரிவித்து ரஹானேவே தயார் படுத்தியிருந்தார். ஆனால் தற்போது ரோகித் சர்மா அதுபோன்ற எந்த ஒரு முன்னேற்பாடுகளை செய்யவில்லை. அதோடு துணை கேப்டனான பும்ராவிடமும் பொறுப்பை கொடுக்க தயக்கம் காட்டுகிறார். எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மாவை கடந்து பும்ராவை கேப்டனாக மாற்றுவது தான் சரியான முடிவு என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



