மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா டிரா செய்தது. அப்போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாட இந்தியா 0/2 என கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் கில், ராகுல், சுந்தர், ஜடேஜா அபாரமாக விளையாடி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள்.
அத்துடன் கடைசி மணி நேரத்திற்கு முன் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியிடம் கேட்டார். ஆனால் சுந்தர், ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் கை கொடுக்க வந்த அவருடைய அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஹரி ப்ரூக் வீசிய பந்தில் சிக்ஸரை பறக்க விட்டு ஜடேஜா சதத்தை அடித்தார்.
உண்மையிலேயே பயந்து யார்:
அப்போது போட்டி முடிந்ததாக நினைத்து ப்ரூக் கை கொடுக்க வந்தார். அதைக் கண்டுகொள்ளாத சுந்தரும் அடுத்த சில பந்துகளில் சதத்தை அடித்ததுடன் போட்டி முடிந்தது. முன்னதாக தங்களுடைய பஸ்பால் ஸ்டைலுக்கு இந்தியா பயந்த காரணத்தாலேயே 2வது போட்டியில் 608 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்ததாக 4வது போட்டிக்கு முன் ஹரி ப்ரூக் கிண்டலடித்திருந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் 4வது போட்டியில் 4வது நாளில் இந்தியாவுக்கு பயந்துகொண்டு இங்கிலாந்து முன்னதாகவே டிக்ளர் செய்யவில்லையா? என்று கேப்டன் சுப்மன் கில் கேட்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு “4வது போட்டியின் முடிவு எனக்கு திருப்தியைத் தாண்டி பெருமையைக் கொடுக்கிறது. இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டம் என்னை மிகவும் பெருமைப்பட வைக்கிறது”
சுப்மன் கில் கேட்கனும்:
“அதாவது கடைசி நாள் பிட்ச்சில் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்த அவர்கள் அழுத்தத்தின் கீழ் உயர்ந்து நின்றனர். இறுதியில் போட்டி டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து டிக்ளேர் செய்வதற்கு முன் அதிக நேரம் பேட்டிங் செய்தார்களா? என்று கேள்வி எழுகிறது. 2வது போட்டியில் இந்தியா 600+ ரன்களை சேசிங் செய்யுமாறு கொடுத்த போது ஒரு இங்கிலாந்து வீரர் செய்தியாளர்கள் சந்திப்பில் “இந்தியா எங்களுக்கு பயந்து விட்டதாலேயே 600 ரன்கள் கொடுத்தனர்” என்று சொன்னார்”
இதையும் படிங்க: சந்நியாசி மாதிரி விளையாடும் முதுகெலும்பு ராகுல்.. அவரோட இடத்தை நிரப்பிட்டாரு.. ஆகாஷ் சோப்ரா பாராட்டு
“அதற்கு முன்பாகவே இந்தியா 500, 600 ரன்களை இலக்காக கொடுத்தாலும் சேசிங் செய்வோம் என்று இங்கிலாந்தினர் சொன்னதாக செய்தியில் படித்தது நினைவிருக்கிறது. அதையே இந்தியா செய்தனர். கடைசியில் நீங்கள் 366 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றீர்கள். தற்போது ஸ்டோக்ஸ் சதத்தை அடித்ததும் 240 – 250 முன்னிலையுடன் இங்கிலாந்து ஏன் டிக்ளேர் எடுக்கவில்லை? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுப்மன் கில் கேட்க வேண்டும். அவர் கேட்கிறாரோ இல்லையோ நான் கேட்கிறேன்” என்று கூறினார்.



