சந்நியாசி மாதிரி விளையாடும் முதுகெலும்பு ராகுல்.. அவரோட இடத்தை நிரப்பிட்டாரு.. ஆகாஷ் சோப்ரா பாராட்டு

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் 4வது போட்டியை போராடி டிரா செய்த இந்தியா கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யத் தயாராக உள்ளது. முன்னதாக இத்தொடருக்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால் இங்கிலாந்தில் பேட்டிங் துறையில் இந்தியா தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் காரணமாக விராட், ரோஹித்துக்கு அடுத்த அனுபவமிக்க பேட்ஸ்மேனான ராகுல் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடும் ராகுல் இதுவரை 4 போட்டிகளில் 511* ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக 1979 சுனில் கவாஸ்கருக்கு பின் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ராகுல் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சந்நியாசி போன்ற க்ளாஸ் ஆட்டம்:

அதிலும் 4வது போட்டியில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்ததால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ராகுல் 90 ரன்கள் அடித்து கில், ஜடேஜா, சுந்தருடன் சேர்ந்து போட்டியை டிரா செய்ய உதவினார். இந்நிலையில் இத்தொடரில் கேஎல் ராகுல் சந்நியாசி போல் விளையாடுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

குறிப்பாக புதிய பந்தை சிறப்பாக எதிர்கொள்ளும் ராகுல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டாப் ஆர்டர் பேட்டிங்கின் முதுகெலும்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் ரோஹித் சர்மாவின் இடத்தையும் ராகுல் நிரப்பியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் ராகுலுக்கு தகுதியான மரியாதையைக் கொடுக்கத் துவங்குவார்கள் என்று நான் நம்பினேன்”

- Advertisement -

ரோஹித் இடத்தில் ராகுல்:

“அவர் வெள்ளைக்கோட்டில் ஒரு உண்மையான சந்நியாசியைப் போல் விளையாடுகிறார். அவர் தகுதியான சதத்தை தவற விட்டிருக்கலாம். ஆனால் இந்த இங்கிலாந்து தொடரில் ராகுல் தான் இந்திய டாப் ஆர்டரின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். இத்தொடரின் ஏதோ ஒரு சமயத்தில் நாம் ரோஹித் சர்மாவை மிஸ் செய்வோம் என்று எதிர்பார்த்தோம்”

இதையும் படிங்க: இந்திய வீரர்களை கொச்சைப்படுத்திய இங்கிலாந்தை நானா இருந்த துவைச்சு அனுப்பிருப்பேன்.. கவாஸ்கர் காட்டம்

“ஏனெனில் கடந்த இங்கிலாந்து தொடரில் ரோஹித் சிறப்பாக விளையாடினார். ஆனால் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இத்தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். டாப் ஆர்டரில் அவர்கள் திடமாகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அது நம்முடைய பேட்டிங் துறைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement