- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா மாதிரி பாகிஸ்தானிலும் வெளிச்சம் இல்லையா? இங்கிலாந்து வீரரை கிண்டலடித்த கவாஸ்கர்.. காரணம் என்ன?

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 26ஆம் தேதி லாகூரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் வாயிலாக சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இங்கிலாந்து கொஞ்சம் சிறிய அணியான ஆப்கானிஸ்தானிடமும் வீழ்ந்தது.

அதனால் இத்தொடரிலிருந்து வலுவான இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோற்றது. அந்தத் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் கிளீன் போல்டானார்.

- Advertisement -

வெளிச்சம் பத்தலையா:

அப்போது கொல்கத்தாவில் காற்றுத் தெளிவாக இல்லாததால் சக்கரவர்த்தியின் பந்தை தம்மால் சரியாக பார்க்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்ததாக என்று ப்ரூக் தெரிவித்தார். எனவே சென்னையில் நடைபெறும் அடுத்தப் போட்டியில் காற்றுத் தெளிவாக இருக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். ஆனால் அடுத்தப் போட்டியில் சென்னையில் காற்றுத் தெளிவாக இருந்தும் சக்கரவர்த்தியிடம் மீண்டும் அவர் போல்டானார்.

அதனால் அந்தத் தொடரிலேயே ப்ரூக் பலரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். அந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 25 (21) ரன்களில் பவுலிங் செய்த முகமது நபியிடமே அவர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இந்நிலையில் கொல்கத்தாவைப் போல பாகிஸ்தானின் லாகூரிலும் வெளிச்சம் இல்லையா? என ஹரி ப்ரூக்கை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் கிண்டல்:

இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹரி ப்ரூக் விக்கெட்டை இப்போது தான் பார்த்தேன். லாகூரில் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறதா? இல்லையா? ஏனெனில் கொல்கத்தாவில் இவர் விளையாடிய போது புகைப் பனியின் காரணமாக பந்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று சொன்னார். அதனாலேயே இங்கு அதைப் பற்றி கேட்கிறேன்”

இதையும் படிங்க: 2012இல் அசாத்தியமா தெரிஞ்ச சச்சின் சாதனையை விராட் கோலி உடைக்கப்போறாரு.. வாசிம் ஜாபர் நம்பிக்கை

“லாகூரில் வெளிச்சம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். எதிரணி கேட்ச் பிடிப்பதற்கு பயிற்சி எடுக்க உதவும் வகையில் அவர் அவுட்டாகி சென்றாரா? என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். இது போக அதே சுற்றுப்பயணத்தில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் தோற்றாலும் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை இருப்பதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். ஆனால் தற்போது இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் அவரை இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -