IND vs RSA : இந்த ஆட்டம் போதுமா ! தினேஷ் கார்த்திக்கை வேண்டாம் என சொன்ன கம்பீரை விளாசும் ஜாம்பவான்

Gambhir
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலைமையில் ஜூன் 17இல் நடைபெற்ற முக்கியமான 4-வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்தது. குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 169/6 ரன்கள் சேர்த்தது.

Dinesh Karthik vs RSA

- Advertisement -

ஏனெனில் ருதுராஜ் 5 (7) ஷ்ரேயஸ் ஐயர் 4 (2) இஷான் கிசான் 27 (26) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றிய நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட்டும் வழக்கம்போல 17 ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். அதனால் 81/4 என திணறிய இந்தியா 150 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்தபோது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர்.

இந்தியா பதிலடி:
5-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து இந்தியாவை மீட்டெடுத்த இந்த ஜோடியில் பாண்டியா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (31) ரன்கள் எடுக்க அவருடன் மிரட்டலாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (27) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பம் முதலே சிறப்பாக பந்துவீசி சவாலை அளித்த இந்திய பவுலர்கள் பெரிய ரன்களை எடுக்க விடாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்தனர்.

Dinesh Karthik

அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 14 (13) ரன்களில் அவுட்டாக கேப்டன் தெம்பா பவுமா 8 (11) ரன்களில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின் வந்த வேன் டெர் டுஷன் 20 (20) க்ளாஸென் 8 (8) டேவிட் மில்லர் 9 (7) என கடந்த போட்டிகளில் அச்சுறுத்தலை கொடுத்த பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் சொற்ப ரன்களில் காலி செய்தனர்.

- Advertisement -

இறுதியில் 16.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 87/9 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 – 2* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய நேரத்தில் 55 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Dinesh Karthik MoM

அசத்தும் டிகே:
கடந்த 2004இல் அறிமுகமாகி 2006இல் இதே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா களமிறங்கிய வரலாற்றின் முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி உலக கோப்பைகளை வென்று விஸ்வரூபம் எடுத்த எம்எஸ் தோனி இருந்ததால் பெரும்பாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்டு வந்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் கடைசி நேரத்தில் களமிறங்கி 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்ததால் 3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. அதில் அட்டகாசமாக செயல்படத் துவங்கியுள்ள அவர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தனது இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார்.

Gambhir

கம்பீர் கேள்வி:
முன்னதாக ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிக்கவில்லையெனில் டி20 உலகக் கோப்பைக்கான பெஞ்சில் அமர்வாதற்காக மட்டும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடிப்பதில் எந்த பயனுமில்லை என்று 3-வது போட்டியின் முடிவில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். ஆனால் ரிஷப் பண்ட், இஷான் கிசான் போன்ற இளம் வீரர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படும் தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாடுவதற்கு இதைவிட வேறு தகுதியில்லை என்று ஆதரவு தெரிவித்துள்ள இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்ததும் அவர் பேசியது பின்வருமாறு. “அணியில் விளையாடவில்லையெனில் அவரை எதற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று சிலர் பேசுவது எனக்கு தெரியும். ஆனால் அவர் விளையாட மாட்டார் என்பதை எப்படி சொல்கிறீர்கள்? அவர் நிச்சயம் விளையாடுவார். பார்ம், அனுபவம், பெயரை பார்த்தாலே நீங்கள் அவரை தேர்வு செய்து விடுவீர்கள். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் அவர் தொடர்ச்சியாக 50 ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கக்கூடாது”

Sunil-gavaskar

“ஆனால் அவரால் தொடர்ச்சியாக 20 பந்துகளில் 40 ரன்கள் போன்ற முக்கிய ரன்களை எடுக்க முடியும். அதனால் தான் இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான போட்டியில் அவர் உள்ளார். இன்றைய போட்டியில் இந்தியா தடுமாறிய போது அனுபவத்தையும் போராட்டம் குணத்தையும் அவர் காட்டினார். அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளார். அவரின் வயதை பார்க்காமல் செயல்பாடுகளை பாருங்கள்” என்று கம்பீருக்கு பதிலடி கொடுத்தார்.

Advertisement