சச்சினால் என்ன பிரச்சனை? பொறாமையால் இந்தியாவை பழி சொல்லாதீங்க.. மைக்கேல் வாகனுக்கு கவாஸ்கர் பதிலடி

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் இதுவரை 146 டெஸ்ட் போட்டிகளில் 12402 ரன்களை குவித்துள்ளார். தற்போது 33 வயதாகும் அவர் இன்னும் நான்கு வருடங்கள் விளையாடி 3000 – 4000 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 15921 ரன்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தற்போது போலவே விளையாடினால் கண்டிப்பாக சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். இருப்பினும் பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா ஆகியோர் சச்சின் சாதனையை ஒரு ஆங்கிலேயர் உடைப்பதை விரும்ப மாட்டார் என்றும் அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

- Advertisement -

சச்சினால் என்ன பிரச்சனை:

ஏனெனில் உலக சாதனைப் பட்டியலில் இந்தியர் இருப்பதையே பிசிசிஐ விரும்பும் என்றும் அவர் கூறியிருந்தார். எனவே பிசிசிஐ விருப்பத்தை தாண்டி சச்சினை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மகத்தான நிகழ்வாக இருக்கும் என்று மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இந்திய ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் கொடுத்த பதிலடி பின்வருமாறு.

“சச்சின் டெண்டுல்கர் அந்த சாதனையை தற்சமயம் வைத்திருப்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன தவறு இருக்கிறது என்பதையும், அதே சாதனையை ஒரு ஆங்கிலேயர் வைத்துக் கொண்டால் டெஸ்ட் போட்டிகள் எப்படி சிறப்பாக இருக்கும் என்பதையும் எங்களிடம் கூறுங்கள். எந்த வகையில் அது சிறப்பாக இருக்கும்? என்பதை எங்களுக்கு அறிவூட்டுங்கள்”

- Advertisement -

ஐபிஎல் பொறாமை:

“வேடிக்கையான காரணங்களுக்காக பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புவதில்லை என்று வெளிநாடுகளில் பேச்சுக்கள் காணப்படுகின்றன. உண்மையில் இந்தியா சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் ஒரு வருடத்தில் அரை டஜன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே ஐபிஎல் வெற்றிகரமாக செயல்படுகிறது என்ற காரணத்திற்காக பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்று அர்த்தமில்லை”

இதையும் படிங்க: 5 போட்டிகள்.. மெக்ராத், வால்ஷ், ஸ்டுவர்ட் ப்ராடை முந்தி அஸ்வின் படைக்க உள்ள வரலாற்று சாதனைகள்

“ஆனால் வெளிநாட்டு ஊடகங்களால் இப்படி ஒரு கதை பரப்பப்படுகிறது” என்று கூறினார். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மீது உள்ள பொறாமையால் வெளிநாட்டவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்திய ஆதரவளிக்கவில்லை என்று சொல்வதாக கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுவது போல பெரும்பாலான வருடங்களில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement